Lankamuslim.org

அரசியல் யாப்பு பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டுமென மட்டும் கூறி நின்று விடவில்லை: பிரதமர்

leave a comment »

நேற்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற ‘சமாதானத்துக்கான அனைத்து மதங்களின் இலங்கைப் பேரவையின் தேசிய’ மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாறிய பிரதமர் ஜயரத்ன இலங்கையின் அரசியலமைப்பில் சகல மதங்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும் சிங்கள பௌத்தர்களுக்கு இருக்கும் சட்டம், உரிமை கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் சமமானதாகுமெனவும் அனைத்து மதங்களும் ஒரே விதமாகவே மதிக்கப்பட வேண்டுமெனவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்

இலங்கையில் அனைத்து மதங்களும் சமமானதே எந்தவொரு மதத்துக்கும் முன்னுரிமை இல்லை என்று பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்திருக்கும் கருத்தானது அவர் வகிக்கும் பிரதமர் பதவிக்கு மட்டுமல்லாது நாட்டின் அரசியலமைப்புக்கும் முரணானது  விரிவாக என்று தெரிவித்திருக்கும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஜாதிக ஹெல உறுமய இது தொடர்பில் பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியமை குறிபிடத்தக்கது

அங்கு மேலும் உரையாற்றியுள்ள பிரதமர் உலகம் இன்று சமாதானத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறது. சமாதானத்தைக் கட்டியெழுப்புவது இன்றைய அவசரத் தேவையாகக் காணப்படுகிறது. அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு பாடுபடுவதன் மூலமாகவே இந்தச் சவாலை வெற்றி கொள்ள முடியும். மதங்களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்படுவதன் மூலமாக மக்களிடம் காணப்படுகின்ற சந்தேகங்களைக் களைய முடியும்.

எமது நாட்டு அரசியலமைப்பில் பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட வேண்டுமென கூறப்பட்டதோடு நின்று விடவில்லை. ஏனைய சகல மதங்களும் பாதுகாக்கப் பட வேண்டுமெனவும் சகல மதங்களுக்கும் சமமான உரிமை இருப்பதையும் யாப்பு வலியுறுத்தியிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்

இந்த மாநாட்டுக்கு சர்வதேச நாடுகள் பலவற்றிலிருந்து மதத்தலைவர்கள் பலரும் இம்மாநாட்டில் கலந்து கொண்டதோடு உள்நாட்டின் சகல பகுதிகளிலுமிருந்து பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றுள்ளார் இதில் ஜம்இய்யதுல் உலமாவின் பிராந்திய தலைவர்களும் மற்றும் அரபுக் கல்லூரிகளின் அதிபர்கள் உட்பட அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்

Written by lankamuslim

ஜனவரி 23, 2011 இல் 10:07 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக