Lankamuslim.org

கஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற முயற்சி கஷ்மீரில் மீண்டும் பதட்டம்

leave a comment »

இந்திய குடியரசு தினத்தன்று, கஷ்மீரில் இந்திய தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பாரதிய ஜனதா கட்சி என்ற இனவாத கட்சி அறிவித்துள்ளதை அடுத்து, காஷ்மீரில் பதட்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது . ஏராளமான இந்திய பொலிஸார் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பா.ஜ., மாநில துணைத் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, பா.ஜ. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்திய குடியரசு தினத்தன்று காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றப் போவதாக பா.ஜ. அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை காஷ்மீர் மாநில பா.ஜ. இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர் விரிவாக

இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பா.ஜ., கட்சியினர் அறிவித்துள்ளனர்.இந்த நடவடிக்கையை கஷ்மீர் மக்கள் இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு வடிவமாக பார்க்கின்றனர்

“பா.ஜ. வின் இந்த நடவடிக்கை காஷ்மீர் மாநிலத்தில் தற்போது நிலவும் அமைதியை சீர்குலைத்து விடும்” என முதல்வர் ஒமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளாராம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து கடந்த சனிக்கிழமை கூறுகையில், “குடியரசு தின விழாவை, அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் இருந்தாலும், “காஷ்மீரில் கொடியேற்றுவதை கைவிட முடியாது’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது இதனால் கஷ்மீர் மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

Written by lankamuslim

ஜனவரி 25, 2011 இல் 6:24 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக