Lankamuslim.org

சட்டத்தரணி றிஸ்வான் தலைமையில் கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமியின் சுயேச்சை குழு

leave a comment »

கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமி எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறப்போகும் உள்ளூராச்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட சுயேச்சை குழுவாக கண்ணாடி சின்னத்தில் களமிறங்குகின்றது  கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமி சட்டத்தரணி றிஸ்வான் என்பவரை தலைவராக கொண்ட குழுவை களத்தில் இறகியுள்ளது என்பதுடன் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் அனைவரும் ஜமாஅத்தே இஸ்லாமியின் உறுப்பினர்கள் என்பதுடன் சட்டத்தரணி ரிஸ்வான் முஸாய்த் பாடத்திட்டங்களை பூர்த்தி செய்தவர் என்பது குறிபிடத்தக்கது

இந்த தகவல்களை எமது தேசிய செய்தியாளருக்கு திருகோணமலை மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமியின் நாசிம் நிஜாம் ஆசிரியர் தெரிவித்துள்ளார் தமது அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமை பீடம் எந்த பங்களிப்பையும் வழங்காது என்றும் கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவுடன் கலந்தாலோசித்து விரிவாக  தாம் அரசியலில் இறங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார் மேலுமவர் கிண்ணியா ஜமாஅத்தே இஸ்லாமி உறுபினர்களின் அரசியல் நடவடிக்கைகள் ஜமாத்தின் வழமையான இஸ்லாமிய பணிகளை பாதிக்காது என்றும் அவைகள் டாக்டர் ஹில்மியின் தலைமையில் வழமை போன்று நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார் எதிர் வரும் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலும்  செய்யப்பட்டுள்ளது இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது கிண்ணியா உறுப்பினர்கள் அரசியலில் இறங்க அனுமதியை மட்டும் வழங்கியுள்ளது என்று எமது தேசிய செய்தியாளர் தெரிவிக்கின்றார்

Written by lankamuslim

ஜனவரி 28, 2011 இல் 3:42 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக