Lankamuslim.org

கிழக்கு முதல்வருடன் அமெரிக்க தூதுவர் இன்று சந்திப்பு

leave a comment »

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசெல் சிஸன் இன்று வியாழக்கிழமை (25.10.2012) கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்திக்க உள்ளார். உட்துறைமுக வீதியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் இன்று மாலை 2.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தல் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் பற்றி இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்க தூதுவர் எதிர்வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு மாகாண ஆளுநரையும், 12 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். -தகவல் அத தெரண

Written by lankamuslim

ஒக்ரோபர் 25, 2012 இல் 1:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக