Lankamuslim.org

முஸ்லிம் அமைச்சர்கள் கொம்பனித்தெரு பிரச்சனைக்கு உடன் தீர்வு காண முன்வரவேண்டும்

leave a comment »


M.ஷாமில் முஹம்மட்

கொழும்பு கொம்பனித்தெருவில் நிர்மாணிக்க பட்டிருந்த சுமார் 25 வீடு களை சட்டவிரோதமாக கட்டபட்டவை என்று கூறி அவை உடைக்கப்பட்டது ஆனால் பாதிக்க பட்ட அந்த பகுதி  மக்கள் அவை பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த போது    சட்ட பூர்வமாக தமக்கு வழங்கப்பட்டவை என்று தொடர்ந்தும் கூறி உடைக்க பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க தீர்மந்துள்ளனர் நீண்ட காலமாக இந்த பகுதியில் வசித்து வரும் இவர்கள் தமது காணி , மற்றும் கட்டுமானங்கள் சட்ட பூர்வமானவை   என்பதை காட்டும் ஆவணங்களை வைத்திருப்பதும், அவர்கள் தமது நகர சபைக்கு வரி செலுத்துவதும் அவர்கள் சட்ட பூர்வ உரிமையுடன் இருந்தமையை காட்டுவதாக தெரிவிக்க படுகின்றது .

அது மட்டுமின்றி இவர்களை வெளியேற்றியமை , நிர்மாணங்களை உடைத்தமை போன்ற நிகழ்வுகள் குறுகிய கால அவகாசம் மட்டும் கொடுக்க பட்ட நிலையில் நடை பெற்றுள்ளது இவர்கள் மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் வளங்கபடுள்ளனர்  என்பது குறிபிடதக்கது விரிவாக பார்க்க

மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் ரஹ்மான் இது பற்றி தெரிவிக்கையில் கொம்பனித் தெருவிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமரர் பிரேமதாசவினால் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் வரிப் பணம் செலுத்துகிறார்கள். வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களை வேற்றுநாட்டவர்கள் போல நடத்துவது எந்தவகையில் நியாயம்? நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த மறுத்தனர். ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தனர். ‘அந்த அதிகாரிகள் கடமையில் உண்மையுண்டு என நினைத்தால் ஏன் அவர்கள் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியமை இங்கு குறிபிடதக்கது

தற்போது நிர்மாணங்களை உடைத்தமைக்கு எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தொடர்வதுடன் கொழும்பு குடியிருப்புகள் பாதுகாப்பு மன்றத்தின் ஏற்பாட்டில்  நாளை வெள்ளி கிழமை   எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது

இது தொடர்பாக இம்மன்றத்தின் அமைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஷரப்தீன் கருத்துத் தெரிவிக்கையில்,அரசாங்கத்தின் அடக்குமுறைக்குத் தொடர்ந்தும் இடமளிக்க முடியாது. இன்று கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீடுடைப்பு நாளை கொழும்பு முழுவதிலும் வியாபிக்கும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்குப் பின்னர்  பள்ளிவாசல் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்” என்று அறிவித்துள்ளார் அதே வேளை நேற்று வீடுகள் இடிக்க பட்டமைகு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் நிகழ்ச்சி ஒன்றும்  நடை பெற்றுள்ளது

கொழும்பு நகரின் நடைபாதை வியாபார கடைகள் அகற்ற பட்டமை தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  புறக்கோட்டை சுயவேலையாளர் சங்க பிரதிநிதிகளை அலரிமாளிகையில் சந்தித்து பேசியிருந்தார்  வியாபாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் போதிராஜ மாவத்தையில் புதிய வர்த்தக தொகுதியொன்றை நிர்மாணிக்குமாறும், அதனை 2வார காலத்தில் கட்டி முடிக்குமாறும், அதுவரை அவர்களுக்கு 2ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

இந்த அணுகு முறை கொம்பனித்தெரு முஸ்லிம் மக்கள்  தொடர்பாகவும் கையாள படுவது  மிகவும் பொருத்தமானதாக இருக்கும் சட்ட நடவடிக்கைகள் உடனடியான தீர்வை பாதிக்க பட்டவர்களுக்கு வழங்குமா என்பது விடை தெரியாத கேள்வி ஆனால் ஜனாதிபதி இந்த விடையம் தொடர்பாக தலையிடுவது , அரசுடம் இருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடையம் தொடர்பாக முன் நின்று முயல்வது உடனடித்தேவை  முஸ்லிம் அமைச்சர்கள் ஒளிந்து மறைந்து இருக்காமல் கொம்பனித்தெரு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு உடன் தீர்வு காண முன்வரவேண்டும்

Written by lankamuslim

மே 13, 2010 இல் 8:44 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக