Lankamuslim.org

நாட்டின் பல பகுதிகளில் மோசமான காலநிலை

leave a comment »

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் கொண்டுள்ள தாழமுக்கம், தென் மேல் பருவப் பெயர்ச்சி என்பனவற்றால் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடைமழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்

தொடரும் கால நிலை மாற்றத்தினால் நாட்டின் வடக்கு, கிழக்கு, சப்பிரகமுவ, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் இதுவரை நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் ,

அதேவேளை, இடி, மின்னலின் போது மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது கடந்த சனிக்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் மூவர் படுகாயமடைந்த னர் என்பது குறிபிட தக்கது ஹபரவெவ எனும் பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஐவரே மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்

Written by lankamuslim

மே 17, 2010 இல் 3:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக