Lankamuslim.org

ரிசானாவின் பெற்றோர் விடுதலை கோரி மனித உரிமை ஆணைக்குழுவிடம் மனு செய்துள்ளனர்

leave a comment »

2005ஆம் ஆண்டு சவூதி அரேபியா நாட்டுக் கைக்குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ரிசானா நபீக் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டார் இவரின் வறுமையில் வாடும் பெற்றோர் ரிஸானாவை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர், ரியாத்திலுள்ள சட்டப் பிரதிநிதி ஊடாக இந்த கருணை மனு அரசாங்க மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பண்டார அல் ஐபானிடம் கையளிக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன . இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணான ரிசானா தொடர்பான வழக்கு விசாரணைகள் கடந்த முறை இவரின் வழக்கு நீதிமன்றம் வந்தபோது அப்துல்லா அல் ரசீம் என்ற நீதியரசர் ரிசானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரை மொழிபெயர்ப்பு பிழை என்பதால் நீக்குமாறும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிபிடதக்கது.

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய ரிசானா வீட்டு எஜமானின் குழந்தை மரணமடைந்தது தொடர்பாக அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். சவூதி அரேபிய நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. இதனையடுத்து 2009ம் ஆண்டு ரிசானா நௌபீக் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ததை அடுத்து விசாரணைகள் சவூதி அரேபிய நீதிமன்றத்தில் மீட்டும் ஆரம்பமானது

Written by lankamuslim

ஜூன் 11, 2010 இல் 10:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக