Lankamuslim.org

காத்தான்குடி ‘மஸ்ஜிதுல் அக்ஸா’ கட்டுமான பணிகள் இடைநிறுத்தம் !

leave a comment »

பலஸ்தீனத்தில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் தோற்றத்தில் காத்தான்குடியில் ஒரு மஸ்ஜித் கட்டபடவுள்ளது ,பத்து கோடிரூபா ஜனாதிபதி நிதியில் இருந்து பதிய காத்தான்குடி பெரிய ஜும்மாஹ் மஸ்ஜித்துதான் பாலஸ்தீனத்தில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸின் தோற்றத்தில் அமைக்கப்பட வுள்ளது இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் நிதியில் இருந்து இலங்கையில் நான்கு மத வழிபாட்டு தளங்களை அமைக்கும் திட்டதின் கீழ் இதற்கு நிதி ஒதுக்க பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஹிஸ்புல்லஹ் செய்வதாக செய்திகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் , பொது தேர்தல் ஆகியன நடைபெற முன்னர் தெரிவிக்கபட்டது.

இந்த செய்தி காத்தான்குடி முஸ்லிம்களுக்கு மட்டும் இன்றி இலங்கை முழுவதிலும் உள்ள முஸ்லிம்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்தது இதன் படி முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் தற்போதைய பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லஹ் வின் ஏற்பாட்டில் பதிய காத்தான்குடி பெரிய ஜும்மாஹ் மஸ்ஜித் ஒப்பந்த காரர்களால் முற்றாக உடைக்கப்பட்டது.

பின்னர் சிறிய அளவில் வேலைகள் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் நிர்மான ஒப்பந்த காரர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள் இதுதொடர்பில் ஒப்பந்தக்கார நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர் இது பற்றி தெரிவித்துள்ள கருத்தில் அப்போது தேர்தல் காலமாக இருந்தபடியால் மிக அவசரமாக இவ்வாரம்ப வேலைகளைத் தொடங்குமாறு அப்போதைய கிழக்கு மாகாண அமைச்சராகவிருந்த அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தமது நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டதாகவும் விரிவாக பார்க்க

முறைப்படியான ஒப்பந்தங்கள் எதுவுமே செய்யாமல் அவரது பேச்சை நம்பி தாங்கள் வேலைகளை ஆரம்பித்ததாகவும் இருபது இலட்சம் ரூபா வரையிலான ஆரம்ப வேலைகளை நாம் செய்தும் அத்தொகையில் ஒரு ரூபாவேனும் இதுவரை எமது நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் ,

இந்த மஸ்ஜித் நிர்வாக இணைச் செயலாளர் இது பற்றி தெரிவித்துள்ள கருத்தில் ஜனாதிபதி செலகத்திலிருந்து எமது நிர்வாகத்திறங்கு இவ்வாறு ஒரு கடிதம் வந்ததாலும், பிரதியமைச்சர் அவர்கள் அவசர அவசரமாக வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதனாலுமே நாம் புதிய பள்ளிவாசலைக் கட்டுவதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்காக இருந்த பள்ளிவாசலை முற்றாக உடைத்தோம் என்றும், எமது பிரதியமைச்சரை நாம் அண்மையில் சந்தித்தோம். அவர் எந்த வழியிலாவது நான் இப்பள்ளிவாசலைக் கட்டுவேன் என எம்மிடம் வாக்குறுதி அளித்துள்ளார். என்றும் தெரிவித்துள்ளார் என்று விமர்சங்கள் எழுந்துள்ளது .

Written by lankamuslim

ஜூன் 19, 2010 இல் 5:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக