Lankamuslim.org

பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்க Darusman தலைமையில் குழு

leave a comment »

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு இலங்கை மீதான போர்க்குற்றசாட்டுகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழுவுக்கு பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது அந்த நிபுணர்கள் குழுவின் தலைமை பொறுப்பிற்கு டாரூஸ்மான்- Marzuki Darusman- என்பவர் நியமிக்கப்பட்டமை முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என இலங்கை அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவின் முன்னாள் சட்ட மா அதிபரான டாருஸ்மான் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திகொண்டவர் எனவும், இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட சர்வதேச முதன்மையாளர் குழுவிலும் டாரூஸ்மான் அங்கம் வகித்ததுடன், இதன் போதே அவர் முரண்பாடானவர் என அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது விரிவாக பார்க்க

டாரூஸ்மானை நிபுணர்கள் குழுவின் தலைமை பொறுப்பில் நியமித்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்கும், இலங்கைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கருத்துகள் முன்வைக்கபடுகின்றது

இலங்கை மீதான போர்க்குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவரத்தொடங்கியத அடுத்து, நிச்சயம் நிபுணர் குழு அமைக்கப்படும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்திருந்தார். ஏன் தாமதமாகிறது? என இன்னர் சிற்றி பிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இக்குழு சர்வதேச தரத்திலானதாகவும், பக்கசார்பற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டுள்ளேன். தகுதியான நிபுணர்களை தேடுகின்றேன் என பான் கீ மூன் தெரிவித்திருந்தார் இந்த இவரின் கருத்து இரட்டை வேடம் கொண்டதாக அரசு தரப்பில் பார்கப்படுகின்றது

Written by lankamuslim

ஜூன் 24, 2010 இல் 9:54 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக