Lankamuslim.org

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது

leave a comment »

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 15 ஆவது வருட நிறைவு விழா மடவளை மதீனா தேசிய பாடசாலையில் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் மிகவும் விமர்சையாக நேற்று சனிகிழமை நடைபெற்றுள்ளது காலை 9.00 மணிக்கு ஆரம்பமான நிகழ்சிகள் மூத்த ஊடகவியலாளர் என் . எம் அமீன் தலைமையில் நடைபெற்றுள்ளது பிரதம அதிதியாகக் பிரதமரும் புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான டீ. எம். ஜயரத்ன கலந்து கொண்டு சிறப்புறையாற்றியுள்ளார் , இந்த கூட்டத்தில் கண்டி ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எம் .எச் .எம் புர்ஹானும்  விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார் இந்த நிகழ்வில்  பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா,ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹகீம் ஏ. எச். எம். அஸ்வர், எம். எச். ஏ. ஹலீம் உட்பட பலர் உரையாற்றியுள்ளனர் அதே வேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படக்கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வெளியானமை குறிபிடதக்கது விரிவாக பார்க்க

அங்கு உரையாற்றிய பிரதமர் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசிய போதும் மற்ற நாடுகளில் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். அந்த வகையில் முழு உலக முஸ்லிம்களும் ஒரே இனமாகின்றனர். எவன் இஸ்லாத்தை விட்டு நீங்கினானோ அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. எனவே சகலரும் இதுபோல் தங்கள் சமைய  கருத்துக்களை அனுசரித்தல் வேண்டும்

Written by lankamuslim

ஜூன் 27, 2010 இல் 5:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக