Lankamuslim.org

ஜனாதிபதியை விசாரிக்க கோருகின்றது அம்னெஸ்டி

leave a comment »

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் தொடர்பாக அவரை அமெரிக்கா விசாரிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கோரியுள்ளது இந்த அம்னெஸ்டி இண்டர்நேஷனல் பக்கசார்பானதாக பார்க்கப்படுகின்றது

ஜனாதிபதியை விசாரிப்பது பற்றி அந்நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பகுதிக்கான இயக்குனர் சாம் ஜாஃப்ரி பிபிசியிடம் கூறுகையில் இலங்கை இராணுவத்தின் மீது, நம்பத்தகுந்த, பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார் விரிவாக

இலங்கை இராணுவத்தின் தலைமை தளபதியாக அதிபர் மகிந்த ராஜபக்ச விளங்குகின்றார் . எனவே இந்த மனித உரிமை மீறல்கள் நடந்தபோது இராணுவ அதிகார கட்டளைத்தொடரின் அதி உயர் பதவியில் இருந்தவர் என்ற முறையில் பொறுப்பேற்றல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

Written by lankamuslim

ஜனவரி 21, 2011 இல் 7:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக