Lankamuslim.org

அபாயாவுக்கு தடை, இஸ்லாம் பாடம் போதிக்க ஆசிரியரும் இல்லை !!

with 4 comments

கொழும்பிலுள்ள பெண்கள் அரச பாடசாலை ஒன்றுக்கு இடமாற்றலாகி சென்ற ஆசிரியர் அபாயா அணிந்து சென்றமையால் குறித்த அந்த பாடசாலையில் அந்த ஆசிரியறுக்கு நியமனம் வழங்கமுடியாது என்று பாடசாலையின் பெரும்பான்மை இன அதிபர் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது.

இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு 10 எல்லைக்குள் அமைந்திருக்கும்  பெண்கள் பாடசாலையான பெஸிபத்தேரியன் என்ற பாடசாலையில் 1200 மாணவிகள் கற்று வருகின்றார்கள் இவர்களில் மருதானை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சார்ந்த 600 முஸ்லிம் மாணவிகள் கற்பதாக தெரியவருகின்றது அந்த பெண்கள் அரசபாடசாலையில் தமிழ் , சிங்களம் ஆகிய மொழிகளில் விரிவாக தரம் 1 தொடக்கம் 11 வரை கற்பித்தல் நடைபெறுகின்றது அங்கு மத்திய மாகாணத்திலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற அபாயா அணிந்திருந்த ஆசிரியரை நோக்கி அபாயா அணிய இங்கு அனுமதி இல்லை

இங்கு கற்பிக்க விரும்பினால் சாரி அணிந்து தேவையானால் தலையை மறைத்து வரலாம் அல்லது வேறு பாடசாலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார் இது தொடர்பாக மேல் மாகாண கல்விப்பணிப்பாளரிடமும், மேல் மாகாண ஆளுனரிடமும் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த ஆசிரியர் வேறு முஸ்லிம் பாடசாலைக்கு உடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளார் .

கொழும்பு10 இல் இயங்கும் 600 முஸ்லிம் மாணவிகள் பயிலும் அந்த பெண்கள் பாடசாலையில் தமிழ் , சிங்களம் ஆகிய மொழிகளில் தரம்  11 வரை கற்பித்தல் நடைபெருகின்றபோதும் இங்கு இஸ்லாம் பாடம் போதிக்கும் ஆசிரியர் இல்லை அங்குள்ள முஸ்லிம் மாணவிகள் கத்தோலிக்க மற்றும் இந்து மதங்கள் பற்றிய பாடங்களை கற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த பாடசாலையில் இஸ்லாமிய உடைக்கு எதிரான கட்டுபாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அரசியல் வாதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும் இன்று வரை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்டவில்லை என்று விமர்சிக்கப்படுகின்றது மேலும் முஸ்லிம் ஆண்கள் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுவரும் பெரும்பான்மை இன பெண் ஆசிரியர்கள் பலர் தமது முதுகு புறத்தின் பெரும் பாகத்தையும் இடுப்பு பகுதியின் பெரும் பாகத்தையும் காட்டிக்கொண்டு கற்பித்தலில் ஈடுபடும் போதும் முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் எந்த உடைக் கட்டுபாட்டையும் விதிப்பது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுகின்றது

கடந்த 100 வருடங்களாக இந்த பாடசாலை இயங்கி வருவதாகவும் பாடசாலை தொடங்கியதில் இருந்து அங்கு முஸ்லிம் மாணவிகள் கற்றுவருவதாகவும் கடந்த சில மாதங்களாக புதிதாக கடந்த வருடம் வந்த பாடசாலை அதிபர் முஸ்லிம் மாணவிகளையும் பாடசாலையில் மாதாந்தம் நடைபெறும் பௌத்த சாஸ்டாங்கங்கள், சடங்குகள் என்பனவற்றில் கலந்து கொள்ளுமாறு உத்தரவுகளை பிறப்பித்து நடைமுறை படுத்தி வருவதாக மாணவிகள் பெற்றோரிடம் முறையிட்டுள்ளனர் என்று கடந்த வருடம் குற்றம் சட்டபட்டமை சுட்டிகாட்ட தக்கது

Written by lankamuslim

ஜனவரி 22, 2011 இல் 9:53 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. thats good news

    m a m sarjun

    ஜனவரி 22, 2011 at 10:54 முப

  2. அபாயாவுக்கு தடை என்று சொன்ன காரணத்தினால், இஸ்லாம் கற்பிக்க முடியாது என்று மாற்று மதத்தவர்களிடம் வாதிடப் போனால், அவர்களிடம் இருக்கும் இஸ்லாத்தின் மீதான பிழையான கண்ணோட்டத்தைக் கழைந்து விட முடியாது. மெதுவாக, மிருதுவாக எமது செய்ற்பாடுகளை முடிக்கி விட வேண்டும். அபாயா என்பது ஒரு கருத்த உடை என்றுதான் மாற்று மதத்தவர்கள் கருதுகிறார்கள். நாம் நற்பண்புகளால் ஹிஜாப்பை காட்ட வேண்டும். முடியுமானவரை நாங்கள் பலனடையப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.

    sabooradem

    ஜனவரி 22, 2011 at 12:09 பிப

  3. Well said, Mr. Saboor adem. This is the way to deal with them.

    Mushi

    ஜனவரி 22, 2011 at 6:51 பிப

  4. استغفر الله و نعوذ بالله منها
    very sad to hear. it is a vry big problem.we have to work hard to get a good solution.It is sirk.

    Shifa

    ஜனவரி 22, 2011 at 9:01 பிப


பின்னூட்டமொன்றை இடுக