Lankamuslim.org

கண்டியில் அதிர்வு , நிந்தவூரில் குழிகள்

leave a comment »

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் 2 ஆம் பிரிவிலுள்ள வீடொன்றின் பின்புறமாக நிலம் வெடித்து பாரிய குழி ஒன்று ஏற்பட்டுள்ளதுடன் அது சதுப்பு நிறைந்ததாகவும் மாறியுள்ளது சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நிதி உதவியாளராகக் கடமையாற்றும் நிந்தவூர் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த எஸ்.எம்.தாஹிர் என்பவரது வீட்டிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டின் பின்புறமாகத் தானாக நிலவெடிப்பு ஏற்பட்டு சுமார் இரண்டு அடி அகலமான குழி ஏற்பட்டுள்ளதுடன், எட்டு அடிக்கு மேல் ஆழம் கொண்ட சதுப்பு மண் நிறைந்ததாகவும் இக்குழி காணப்படுகின்றது.

இக்குழியைச் சுற்றி நிலவெடிப்பு காணப்படும் அதேவேளை, குறித்த வீட்டின் பின்புறமாகவுள்ள மற்றொரு வீட்டின் சுவரிலும் வெடிப்பு ஏற்பட்டுக் காணப்படுகின்றது கடந்த முன்று தினங்களாக இரவு முழுவதும் பெய்த அடைமழையைத் தொடர்ந்தே இவ்வாறு நிலத்தில் வெடிப்புடன் கூடிய குழி ஏற்பட்டுள்ளது இந்த தகவலை எமது நிந்தவூர் lankamuslim.org செய்தியாளர் உறுதிப்படுத்தியுள்ளார் அதேவளை விரிவாக

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் கடந்த ௨௩ ஆம் திகதி நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டது பின்னர் ஆய்வுகள் அச்சத்துக்குரிய அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்தது அதேபோன்று நேற்று முன்தினம் கண்டியில் நிலநடுக்கு உணரப் படுவதாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு ஆய்வுகளின் மூலம் கண்டி பிரதேசத்தில் பயன்படுத்தபடும் இயந்திரங்களின் அதிர்வு என்று தெரிவிக்கப்பட்டமையும் குறிபிடத்தக்கது

Written by lankamuslim

ஜனவரி 27, 2011 இல் 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக