Lankamuslim.org

முஸ்லிம் காங்கிரஸ் இன்று நீதிமன்றம் செல்கின்றது

leave a comment »

உள்ளூராட்சி சபை தேர்தலுக் காக தாக்கல் செய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ் லிம் காங்கிரஸின் வேட்பு மனுக் கள் நிராகரிக் கப்பட்ட மைக்கு எதி ராக இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கடந்த 27ம் திகதி வேட்பு மனுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்ட போது ஸ்ரீல மு. காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தனித்து போட்டியிடவென உக்குவளை பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு மாத்தளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது விரிவாக

உக்குவளை பிரதேச சபைக்கு ஸ்ரீல. மு. காவில் போட்டியிடும் வேட்பாளர் எம். எப். எம். ஷாஜஹானின் வறக்காமுறை இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு (29ம் திகதி) 9.30 மணியளவில் இடம்பெற்ற விசேட ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீம் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், தகுந்த ஏற்றுக் கொள் ளக்கூடிய காரணங்களினால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் பற்றி நாம் எதையும் சொல்ல முடியாது. என்றாலும், நிராகரிப் புக்கான எவ்வித காரணங்கள் இல்லாமல் சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள் ளன. நிராகரிப்புக்கான காரணங்களை எமது கட்சி பிரதிநிதிகள் தெரிவத்தாட்சி அதி காரிகளிடம் கேட்டபோது சில தெரிவத்தாட்சி அதிகாரிகள் காரணங்களைக் கூறவில்லை.

Written by lankamuslim

ஜனவரி 31, 2011 இல் 9:15 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக