Lankamuslim.org

முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் தீயசக்திகள் சதித்திட்டம் : பிரதமர் ?

with one comment

பிரதமர் முஸ்லிம்கள் மத்தியில் ஆற்றிவரும் உரைகளின்போது முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும்  நாட்டிலும் உள்நாட்டு வெளிநாட்டு சதிகள் பற்றி பேசிவருகின்றார். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மார்க்க ரீதியிலான பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட சில முஸ்லிம் அரசியல் வாதிகள் முயன்று வருவதாகவும் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டு சக்திகளுக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் துணை போக கூடாது என்று கடன் 3.6.2010 அன்று பிரதமர் டீ. எம். ஜயரத்ன தனது அலுவலகத்தில் சந்தித்த இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் மத்தியில் பேசும்போது கூறியுள்ளார் அதேபோன்று நேற்று 13.6.2010  அன்று நடைபெற்ற அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் வைரவிழா மாநாடு கொழும்பு கிரேண்ட் ஓரியன்டல் ஹோட்டலில் நடைபெற்றபோதும் பிரச்சினையின்றி வாழ்ந்த மக்களைப் பிளவுபடுத்தி பிரிவினையை ஏற்படுத்தி நிலைமைகளைச் சீர்குலைக்க பல சக்திகள் இன்று திட்டமிட்டு வேலை செய்கின்றன. இந்தச் தீய சக்திகள் குறித்து முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டு என்றும் பலம் குன்றிய நாடுகளை மேலும் பலவீனப்படுத்தி பிளவுகளையும் அதிகரித்து மிலேச்சத்தனமான செயல்கள் மூலம் தமது இலட்சியங்களை வெற்றிகொள்வதே இந்தச் சக்திகளின் உபாயமாகுமெனவும் தெரிவித்துள்ளார் மேலும் அங்கு உரையாற்றுகையில் விரிவாக பார்க்க

சிங்கள – முஸ்லிம் ஒற்றுமை இந்நாட்டில் நெடுங்காலம் நிலைபெற்று வந்துள்ளது. முஸ்லிம்களுடன் நான் நீண்ட காலமாக நெருக்கமான உறவுகளையே தொடர்ந்து வளர்த்து வருகிறேன். மூன்று தலைமுறைகளாக முஸ்லிம்கள் எனக்கு அரசியலில் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். சிங்களவர்களை விட முஸ்லிம்களுடன் தான் நான் கூடுதலாகப் பழகியுள்ளேன். பாடசாலை நாட்களிலும் கூட பள்ளிவாசல்களின் முற்றங்களிலேயே நான் விளையாடியுள்ளேன். அந்த நினைவுகள் பசுமையானவை. மஸ்ஜித்கள், மத்ரஸாக்கள், அரபிக் கல்லூரிகளின் வளர்ச்சிக்கு நான் நிறைய உதவியுள்ளோம்.

சகல மதங்களின் பாடசாலைகளிலும் கற்றவன் என்ற வகையில் நான்கு பிரதான மதங்கள் பற்றியும் நான் அறிந்து வைத்துள்ளேன். மத விவகார அமைச்சர் என்ற வகையில் இது எனக்குச் சாலப் பொருத்தமாகும். முஸ்லிம்கள் இந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களின் மூலமே நாட்டுக்குப் பெருந்தொகை அந்நியச் செலாவணி கிடைக்கிறது முஸ்லிம்களுள் வறியவர்களும் உள்ளனர். இத்தகைய ஏழை மக்களுக்கு நாம் உதவ வேண்டும். வறிய முஸ்லிம் பெண்களின் குடிசைக் கைத்தொழிலை ஊக்குவித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘மஹிந்த சிந்தனை’யில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாம் ஒரே இனம், ஒரே மக்கள் கூட்டம் என்ற வகையில்  ஒன்றுபட வேண்டும் வளரும் சமூகத்துக்கு நாம் நல்ல கருத்துக்களை ஊட்ட வேண்டும். பிளவு, பிரிவினை என்பவை விஷம் போன்றவை. அந்த விஷம் ஊட்டப்படாமல் நாம் தடுக்க வேண்டும் என்றார்.

Written by lankamuslim

ஜூன் 14, 2010 இல் 10:35 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இதை சிங்கள மக்கள் மத்தியிலும் சொல்வாரானால், உண்மையிலே அவர் சிந்தனையில் உண்மை இறுக்கி என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.
    சொல்வாரா அல்லது இதுவெல்லாம் முஸ்லிம்களுக்கு மாத்திரம் அவர் சொல்லும் உபதேசமா?! பார்க்கலாம்.

    Sahib1344@hotmail.com

    ஜூன் 14, 2010 at 6:50 பிப


பின்னூட்டமொன்றை இடுக