Lankamuslim.org

அங்கிகாரம் பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமாக ஜாமியா நளீமியா

leave a comment »

பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாதம் 12 திகதி தொடக்கம் இன்று வரை வரைநடைபெற்றுகொண்டிருக்கும் இஸ்லாமிய கண்காட்சியின் அதன் தொடக்க நாளான 12 ஆம் திகதி அங்குரார்பன நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித்த சேனரத்ன பேருவலை ஜாமியா நளீமியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை அங்கிகாரம் பெற்ற சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு தான் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார் பேருவலை ஜாமியா நளீமியா காலாபீடம் ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்துகுரிய தகமைகளை கொண்டிருந்தாலும் இலங்கையில் ஆரம்பத்தில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கபடாமையால் இது தொடர்ந்தும் அங்கிகாரம் பெறாத பல்கலைக்கழகமாக இருந்து வந்துள்ளது என்பது குறிபிடதக்கது தற்போது அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கி வருவதால் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி ஜாமியா நளீமியா நிர்வாகம் இதை அங்கிகாரம் பெற்ற இஸ்லாமிய பல்கலைக்கழகமாக அல்லது அங்கிகாரம் பெற்ற சர்வதேச விரிவாக பார்க்க இஸ்லாமிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குநடவடிக்கைகளை மேட்கொள்ளமுடியும் என்று டாக்டர் ராஜித்த சேனரத்ன மற்றும் கண்காட்சியின் அங்குரார்பன நிகழ்வில் பிரதான அமைச்சராக கலந்து கொண்ட அமைச்சர் பௌசியும் இந்த கருத்தை முன்வைத்துள்ளார் பேருவலை ஜாமியா நளீமியா மற்றும் மாதம்பை இஸ்லாஹியா அரபிக் கலாசாலை என்பனவும் இலங்கை இஸ்லாமிய பல்கலைக்கழக வரிசையில் பல்கலைக்கழக தகமைகளை நோக்கி முன்னகர்ந்து வருபவை என்பது குறிபிடதக்கது

அதேவேளை இடம்பெற்று வரும் இஸ்லாமிய கண்காட்சி, நாளை புதன்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷேக் அகார் முஹம்மத் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஜூன் 15, 2010 இல் 9:58 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக