Lankamuslim.org

முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட இரண்டு ஜும்மாஹ் மஸ்ஜிதுகள் மீண்டும் இயக்கம் பெறுகின்றது

with 2 comments

வடமாகான முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றிய பின்னர் முல்லைதீவு, விடத்தில்தீவு ஆகிய மாவட்ட மஸ்ஜிதுகளும் வடமாகானத்தின் நூற்றுகணக்கான மஸ்ஜிதுகளை  போன்று கைவிடப்பட்டன இங்கு இருந்த பல மஸ்ஜிதுகள் மிக மோசமாக சிதைவடைந்தன தற்போது இந்த இரண்டு மாவட்ட மஸ்ஜிதுகளும் ஓரளவு சீரமைக்கபட்ட நிலையில் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது முதல் ஜும்மாவை முல்லைதீவு ஜும்மாஹ் மஸ்ஜித் இன்றும்  18.6.2010, விடத்தில்தீவு ஜும்மாஹ் மஸ்ஜித் எதிர்வரும் வெளளிகிழ மை 25.6.2010  திகதியும் நடாத்தவுள்ளது .

முல்லைதீவு முஸ்லிம்கள் பல சிரமங்கள் மத்தியில் தங்களுடைய பிரதேசத்திற்குச் சென்று தமது வீடுவாசல்களையும், காணிகளையும் பார்வையிட்டு வருகின்றனர். எனிலும் அண்மையில் விரிவாக பார்க்க

முல்லைதீவுக்கு சென்ற சில முல்லைதீவு முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு அந்த மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இராணுவத்தினர் மூலம் உத்தரவிட்டிருந்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக்கும் தெரிவித்திருந்தார் அதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முல்லை மாவட்ட த்துகான மாநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்து என்பது குறிபிடதக்கது 1990 இல் முஸ்லிம்கள் வெளியேற்ற படும்போது சுமார் 7000 ஆயிரம் பேர் வரை வாழ்ந்துள்ளனர் இங்கு ஐந்து மஸ்ஜிதுகள் , இரண்டு முஸ்லிம் பாடசாலைகள் அமைந்திருக்கின்றன Mullaithivu muslim Federation என்ற அமைப்பின் செயலாளர்   S.H.M. றிஸ்னி தலைமையில் ஜும்மாஹ் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது

விடத்தல்தீவு மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு கிராமமாகும் . விடத்தல்தீவு மன்னார் நகரத்திலிருந்து வடக்குப் பக்கமாக சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒருகிராமம் இங்கு  இரண்டு மஸ்ஜிதுகள் உள்ளன. ஒன்று மொஹிதீன் ஜும்மாஹ் மஸ்ஜித் மற்றது தைக்கா மஸ்ஜித்.

வடமாகான முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றிய பின்னர் இந்த மஸ்ஜித்துகள் இரண்டும் சேதத்திற்குள்ளானதுடன் பாழடைந்தும் காணப்பட்டன.  20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது முதல் ஜும்மாவை  ஆரம்பித்துத் தொடர்ந்து தொழுகைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தற்போதைய மஸ்ஜித் நிர்வாகம் விடத்தல்தீவு மீள்குடியேற்ற அபிவிருத்தி சங்கத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது

Written by lankamuslim

ஜூன் 18, 2010 இல் 9:43 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. very good news MashaAllah

    son of islam

    ஜூன் 18, 2010 at 3:23 பிப

  2. SRI LANKAN MUSLIMS NEED TO STOP TO ASK ABOUT TAMIL PEOPLE. THEY DON’T HAVE RIGHT TO ASK ANYTHING TO TAMIL PEOPLE OR TAMIL FREEDOM FIGHTER…WE ARE THE PEOPLE WHO IS RIGHT TO FIRHGT IN OUR COUNTRY IN SRI LANKA.SO THE MUSLIM PEOPLE HAVE TO BE WITH TAMIL PEOPLE SIDE AND LISTION TAMIL PEOPLE LEADERS WHAT EVER THEY SAY…IF MUSLIMS ACT LIEK THIS THEN THEY CAN BE IN SRI LANKA IF NOT PLZ GET OUT FROM SRI LAKNKA..AND PLZ DONOT MAKE RABBISH IN TAMIL WEB SITE AND TAMIL LANUAGE AS WELL.

    Senthamilan

    ஜூலை 20, 2010 at 11:57 முப


பின்னூட்டமொன்றை இடுக