Lankamuslim.org

மட்டக்களப்பு மாவட்ட உயர்மட்ட அதிகாரபூர்வ கூட்டதுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை !

with one comment

33 கிராமங்களையும் ஆயிரக் கணக்கான விவசாய காணிகளையும்  நூற்றுக்கணக்கான மக்களையும்   இழந்தவர்கள்   மீள்குடியேற்ற, அபிவிருத்தி கூட்டத்தில்  புறக்கணிப்பு  !

மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும். பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை நடை பெற்ற உயர்மட்ட தீர்மானங்களை எடுக்ககூடிய கலந்துரையாடலுக்கு மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ மற்றும் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளீதரன் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலுக்கு முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் அழைக்க படவில்லை என்று குற்றம் சட்ட பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 முஸ்லிம் கிராமங்கள் கைவிடப்பட்டுள்ளது ஆயிர கணக்கான விவசாய காணிகள் பறிபோயுள்ளது நூற்று கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் அவர்களின் பிரதிநிதிகள் அந்த மாவட்டத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி தொடர்பான அதிகார பூர்வ தீர்மானமிக்க கூட்டதுக்கு அழைக்க படவில்லை ஆளும் தரப்பு பிதியமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் விரிவாக பார்க்க ஆகியோர் திட்டமிட்ட முறையில் புறகணிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகின்றது இது தொடர்பாக பிதியமைச்சர் ஹிஸ்புல்லா வினவப்பட்டபோது அழைப்பு தனக்கு விடுக்கப்படவில்லை என்றும் எனிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் சிலரை தனது அலுவலகத்துக்கு அழைத்து அம்மைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ வுடன் பேசுவதற்கு ஏற்பாடுகளை செய்யது அவர்கள் அமைச்சரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார் எனிலும் இது சாதாரன சந்திப்பாக மட்டும் இருந்ததாக அதிகாரபூர்வமான சந்திப்பாக இருக்கவில்லை என்று எமது காத்தான்குடி லங்காமுஸ்லிம் செய்தியாளர் தெரிவித்துள்ளார் காத்தான்குடி அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளை இந்த அதிகாரபூர்வமற்ற சந்திப்புக்கு பிதியமைச்சர் ஹிஸ்புல்லா அழைத்த போதும் அதிகார பூர்வ மற்ற சந்திப்புக்கு அவர்கள் செல்லவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

,பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் இதுபற்றி தெரிவிக்கையில் நானும் பிதியமைச்சர் ஹிஸ்புல்லா ஹிஸ்புல்லாவும் இந்த கூட்டதுக்கு அழைக்க படவில்லை இது தொடர்பாக நான் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருமை நாயகத்தை தொடர்பு கொண்டு கேட்டான் அதற்கு அவர் இந்த கூட்டத்துக்கான அழைப்பை அம்மைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ விடுத்ததாக தெரிவித்தார் நாம் மட்டக்களப்பு மாவட்ட மீள் குடியேற்றம் , அபிவிருத்தி தொடர்பாக நடைபெற்ற மிகவும் முக்கியமான கூட்டதுக்கு மாவட்டத்தின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறகணிக்க பட்டமை தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார் மேலும் யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 33 முஸ்லிம் கிராமங்கள் கைவிடப்பட்டுள்ளது ஆயிர கணக்கான விவசாய காணிகள் பறிபோயுள்ளது நூற்று கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் இவை பற்றி அமைச்சர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் எடுத்து சொல்வதற்கு குறிய சந்தர்பமே இந்த கூட்டமாகும் இந்த சந்தர்பத்தை எமக்கு வழங்கா விட்டதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளான எம்மை திட்டமிட்டு புறகணித்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காத்தான்குடி நகரசபை எதிர் கட்சி தலைவர் அப்துல் ரஹ்மான் இவ்வாறான புறகணிப்பு இது முதல் தடவை அல்ல இது போன்ற சந்தர்பங்களில் பல தடவைகள் இவ்வாறு நடைபெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்

ஒரு மாவட்டத்தில் அரச அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வைபவங்களுக்கு அம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்படுவது நடை முறை ஆகும். இருந்தும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அமைச்சர்கள் கலந்துகொள்ளும் வைபவங்களுக்கு அந்த மாவட்டத்தின் ஆளும் தரப்பிலும் , எதிர் தரப்பிலும் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் புறகணிக்க பட்டுள்ளார்கள்

Written by lankamuslim

ஜூன் 17, 2010 இல் 8:30 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. 33 கிராமங்களையும் ஆயிரக் கணக்கான விவசாய காணிகளையும் நூற்றுக்கணக்கான மக்களையும் இழந்தவர்கள் மீள்குடியேற்ற, அபிவிருத்தி கூட்டத்தில் புறக்கணிப்பு !

    Not only this but we beard a lot

    Aslam

    ஜூன் 18, 2010 at 3:26 பிப


பின்னூட்டமொன்றை இடுக