Lankamuslim.org

யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் புறம்பான முறையில் கையாளப்படவேண்டும்:அமைச்சர் மில்ரோய்

leave a comment »

மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ மற்றும் மீள் குடியேற்ற பிரதியமைச்சர் வி. முரளீதரன் ஆகியோர் யாழ்ப்பணம் சென்று யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரதான குடியிருப்பு பகுதியான சோனகர் தெரு –Moor Streets- பகுதிக்கு வியஜம் செய்து தகர்ந்து கிடக்கும் முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவித்துள்ள மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணாண்டோ 1990 ஆம் ஆண்டு இரு மணிநேரத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவது புறம்பான முறையில் கையாளப்படவேண்டும் என்றும் வெளியேற்ற படும்போது இரண்டு பேருடன் இருந்தவர்கள் இன்று பல குடும்பங்களாக இருக்கின்றார்கள் இவர்கள் மீளக் குடியேற்றுவதற்கு போதிய வசதிகள் செய்யப்படவேண்டும் இது குறித்து ஜனாதிபதியுடன் விசேடமாக கலந்துரையாடுவேன் , வட பகுதி முஸ்லிம்களது நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் நாடுகளினதும் கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடியேற்ற அமைச்சராக மில்ரோய் பெர்ணாண்டோ பதவியேற்ற பின்னர் 2010-06-17 அன்று யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ வியதின் போது இவற்றை தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க

இவர் யாழ் ஒஸ்மானிய கல்லூரியில் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் மௌலவி B.A.S.சுபியான் தலைமையில் ஏற்பாடு செய்யபடிருந்த பொருட்கள் வழங்கும் வைபவத்திலும் கலந்து கொண்டு பெருட்களை மீள்குடியேறியுள்ள மக்களுக்கு வழகியுள்ளார் யாழ் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யபடிருந்த உயர் மட்ட கூட்டத்தில் கலந்து விட்டு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் கண்ணிவெடி அகற்றல் , அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியேற்றம் , மீள் குடியேறும் மக்களின் வாழ்வாதாரம் தொழில் , கல்வி உட்பட சகல விடையங்களும் ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார் குறிப்பாக மீள் குடியேற்றபட்ட மக்கள் விடையத்தில் அரசாங்கள் மிகவும் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்த அவர் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்மந்தமாக ஜனாதிபதின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

ஜூன் 21, 2010 இல் 10:11 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக