Lankamuslim.org

அரசியல் சாசனத் திருத்தங்கள் பாராளுமன்றம் வருகின்றது

leave a comment »

அரசியல் சாசனத் திருத்தங்கள் எதிர்வரும் ஜூலை மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பிலான வரைவுத் திட்டங்களுக்கு அமைச்சரவை கடந்த 9ம் திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தவணைக்காலம், தேர்தல் முறைமை, 17 ஆவது திருத்தச் சட்ட மூலம் மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற தொடர்பிலான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பான வரைவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு விரைவில் விளக்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும்,  ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீட்டிக்கும் முனைப்புக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவளிக்கப்பட மாட்டாது என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Written by lankamuslim

ஜூன் 20, 2010 இல் 9:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக