Lankamuslim.org

எகிப்து இராணுவ அதிகாரத்தின் முதல் பல் பிடுங்கப்படுகிறது

leave a comment »

உளவுத்துறை தலைவர் முராத் முவாஃபியிடம் பதவி விலகுமாறு ஜனாதிபதி முர்ஸி உத்தரவிட்டுள்ளார். ஸினாயில் இராணுவத்தினருக்கு எதிராக மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 16 எகிப்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

முராத் முவாஃபியி பதவி நீக்கப்பட்டு புதிய உளவுத்துறை தலைவராக முஹம்மது ரஃபாத் அப்துல் வாஹிதை ஜனாதிபதி முர்ஸி நியமித்துள்ளார்.

மேலும் இராணுவ போலீசுக்கு புதிய தலைவரை நியமிக்க பாதுகாப்பு அமைச்சருக்கு முர்ஸி உத்தரவிட்டுள்ளார். ஹம்தி பதீன் என்பவர் முதலில் இராணுவ போலீசுக்கு தலைவராக இருந்தார் .

இது  தொடர்பான எமது முந்திய செய்தி:

பலஸ்தீன் எகிப்து உறவை உடைக்க இஸ்ரேல் சதி

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2012 இல் 7:24 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக