Lankamuslim.org

லிபியாவில் புதிதாக இடைக்கால நிர்வாக தலைவர் தெரிவு

leave a comment »

ஏ.அப்துல்லாஹ் : லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் அல் மகாரீப்பை தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

( தேசிய காங்கிரஸ்) நடந்த வாக்கெடுப்பில் உறுப்பினர்கள் 113 பேர் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட முற்போக்கு சுதந்திர கட்சியை சேர்ந்த அலி ஜிதானி 85 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

௭திர்வரும் வருடம் அரசியலமைப்பு வரைபொன்று முன்னெடுக்கும் வரை நாட்டை செயற்படுத்துவதற்காக பிரதமரை நியமிக்கும் நடவடிக்கைக்கு மொஹமட் மகாரீப் தலைமை தாங்கவுள்ளார். இடைக் கால தேசிய அதிகார மாற்று சபையானது 200 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு வியாழக்கிழமை அதிகாரத்தைக் கையளித்திருந்தது.

கடந்த வருடம் அந் நாட்டு முன்னாள் தலைவர் மும்மர் கடாபி படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த புரட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அதிகாரமாற்று சபை தற்போது கலைக்கப்பட்டுள்ளது. மத்திய திரிபோலி நகரில் கூடிய பெருந் தொகையான மக்கள் மேற்படி அதிகார கைமாற்றத்தை கொண்டாடினர். இது லிபியாவின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது அமைதி வழியிலமைந்த அதிகார கைமாற்றமாக கருதப்படுகிறது.

இதற்குமுன்பு, தேசிய இடைக்கால ஆட்சிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு கடந்த புதன்கிழமை, நாட்டின் அரசியல் அமைப்பு அதிகாரத்தை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்திடம் ஒப்படைத்துள்ளது

42 ஆண்டுகால சர்வதிகாரி கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர், லிபியாவில் கடந்த ஜூலை 7‐ஆம் திகதி நடந்த தேர்தலில் 200 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். இதில்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கடாபி அரசுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் பிரதமராக இருந்த மஹ்மூத் ஜிப்ரிலின் தலைமையிலான லிபரல் கூட்டணி மொத்தம் 39 ஆசனங்களை வென்றுது அடுத்ததாக எதிர்பார்க்கப் பட்டது போன்று லிபிய இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான நீதிக்கும் கட்டுமானத்திற்குமான கட்சி 17 ஆசனங்களை வென்றது .

இந்த தேர்தலில் 200 ஆசனங்களில் கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட 80 ஆசனங்களில் எஞ்சிய 24 ஆசனங்களையும் சிறிய கட்சிகள் வென்றது . ஏனையவை சுயேச்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 120 ஆசனங்களில் அதிகமானதை பிரதேசங்களின் இஸ்லாமிய செயல்பாட்டாளர்களும் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது .

Written by lankamuslim

ஓகஸ்ட் 11, 2012 இல் 8:03 முப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக