Lankamuslim.org

ஜனாதிபதி முர்ஷி அதிரடி: அதியுயர் இராணுவத் தளபதிகளுக்கு கட்டாய ஓய்வு !!

leave a comment »

 ஏ.அப்துல்லாஹ் : எகிப்து ஜனாதிபதி முர்ஷி எகிப்தின் அதியுயர் இராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுத்ததுடன் , ஜனாதிபதியின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் இராணுவ யாப்பு மாற்ற அறிவிப்பையும் அதிரடியாக உடன் அமுலுக்கு வரும்விதமாகஇரத்து செய்துள்ளார்  .

சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் கால இராணுவ தளபதியாக இருந்து முபாரக் பதவி நீக்கப்பட்ட பின்னர் எகிப்தின் இராணுவ நிர்வாகத்தை வழிநடாத்தியவரும்,  பாதுகாப்பு அமைச்சருமான பீல்ட் மார்சல் தந்தாவியையும், எகிப்து கூட்டு படைகளின் தளபதியான ஸாமி அனானையும் குறித்த பதவிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுமாறு முர்ஷி கட்டளையிட்டுள்ளார்.

ஜனாதிபதி முர்ஷியின் ஊடகப் பேச்சாளர் யாசீர் அலி இன்று ஞாயிற்று கிழமை தெரிவித்துள்ள தகவலில் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்சல் தந்தாவி ஓய்வு பெறுகிறார் என்றும் அவரின் இடத்திற்கு அப்துல் பாதாஹ் நியமிக்கப்பட்டுள்ளார். என்றும் அதேபோன்று கூட்டு படைகளின் தளபதியான ஸாமி அனான் ஓய்வு பெறுகிறார் என்றும் இவர்கள் இருவரும் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக செயல்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.

புதிய நியமனம் மற்றும் பதவி நீக்கம் என்பன உடனடியாக அமுலுக்கு வந்துள்ளதாகவும் ஜனாதிபதி  ஊடகப் பேச்சாளர் யாசீர் அலி அறிவித்துள்ளார் . அதேவேளை எகிப்தின் துணை ஜனதிபதியாக முன்னாள் நீதிபதியான மஹ்மூத் மக்கி நியமிக்கப் பட்டுள்ளார் என்று ஜனாதிபதி  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .இவர்களுடன் விமானபடைத்  தளபதி ,கட ற்படைத்  தளபதி ஆகியோருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் எகிப்து உளவு பிரிவின் தலைவரும் பதவி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

பீல்ட் மார்சல் தந்தாவி

கூட்டு படைகளின் தளபதியான ஸாமி அனான்

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2012 இல் 11:22 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக