Lankamuslim.org

சமூக அடிமட்டத்தில் வாழும் இந்திய முஸ்லிம்கள்: பாகம் 1,2,3

leave a comment »

BBCTamil: பாகம் 01, பாகம் 02, பாகம் 03: இந்திய வரலாற்றில் பன்னெடுங்காலமாய் இஸ்லாமியர் நிலை குறித்து பல்வேறு தளங்களிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவர்களது சமூகப் பொருளாதார சூழல், பண்பாட்டு விழுமியங்கள், கடந்த ஒரு தசாப்தமாக அடிப்படை வாதம், மற்றும் தீவிரவாதம் என்று பல கூறுகள் அலசப்பட்டு வந்திருக்கின்றன.

அண்மையில் நீதிபதி ராஜீந்தர் சச்சார் குழுவின் அறிக்கை, பின்னர் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் இரண்டுமே இந்தியாவில் முஸ்லீம்கள் பல்வேறு வகைகளில் மிகப் பின் தங்கியிருக்கின்றனர் என வேதனையுடன் சுட்டிக்காட்டி, அவர்கள் நிலை மேம்பட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தின.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் தலைவர் ஜெயினுல்லாபிதீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஃபாத்திமா முஷாரஃப் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களுடன் இப்பகுதி ஒலிபரப்பாகின்றது.

ஒப்பீட்டளவில் தமிழகத்தில் வாழ்நிலையும் நல்லிணக்கும் மகிழ்ச்சிக்குரியதாயிருந்தாலும் முஸ்லீம்கள் நிலை இன்னமும் மேம்படுவது அவசியம் என்று பலர் வலியுறுத்துகின்றனர்.

தொடரை தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் டி. என். கோபாலன்.-BBCTamil:

Audio ஒலிவடிவில் பெட்டகம் : பாகம் 01

Audio ஒலிவடிவில் பெட்டகம் : பாகம் 02

Audio ஒலிவடிவில் பெட்டகம் : பாகம் 03

Written by lankamuslim

ஓகஸ்ட் 24, 2012 இல் 10:50 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக