Lankamuslim.org

முன்னீஸ்வரம் ஆலய போராட்டத்துக்கு தடை

leave a comment »

BBC Tamil: இலங்கை அரசாங்க அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் சிலாபம் முன்னீஸ்வரம் காளி கோயில் முன்பாக நடத்தப்பட இருந்த போராட்டத்துக்கு இலங்கை நீதிமன்றம் ஒன்று தடை விதித்துள்ளது.

அந்தக் கோயிலில் நடக்கவிருந்த மிருக பலி பூசையை தடைசெய்ய வேண்டும் என்று கோரியே அமைச்சரும், வேறு சில அமைப்புக்களும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக மிரட்டியிருந்தனர்.

ஆயினும் இது தொடர்பாக பொலிஸாரினால் சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து அத்தகைய போராட்டங்களுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அந்த ஆலயத்தில் நூற்றுக்கணக்கான ஆடுகளும், கோழிகளும் பலியிடப்படுவதாகக் கூறி அங்கு சென்று அத்தகைய பலியிடும் பூசையை கடந்த ஆண்டு அமைச்சர் மேர்வின் சில்வா தடுத்திருந்தார்.

இந்துக்கள் சிலர் இந்த பலியிடும் பூசையை வரவேற்கின்ற போதிலும், அப்பகுதியை சேர்ந்த பெரும்பான்மையினரான பௌத்தர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

அமைச்சர் நடத்தவிருந்த போராட்டத்துக்கு அரசாங்க ஆதரவு பிக்குவான ஓமல்பே சோபித தேரரும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

எப்படியிருந்த போதிலும், தற்போது அந்த பலியிடும் பூசை நடைபெறும் தினம் வரை அந்த ஆலயத்தில் எந்தவிதமான போராட்டங்களையும் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமது பலிப்பூசையை நடத்த அமைச்சருக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்று கூறியுள்ள அந்த ஆலயத்தின் பூசகர், ஜனாதிபதியிடம் மேலதிக பாதுகாப்பு கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 இல் 3:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக