Lankamuslim.org

முஸ்லிம் காங்கிரஸின் ‘பையத்’ உறுதி மொழி தொடர்பாக பிபிசி தமிழோசையின் குறுக்கு விசாரணை !!

with 4 comments

BBC Tamil: கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களிடம் கட்சி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய சமய பெரியார்களான உலமாக்கள் சாட்சியாக சத்திய உறுதி மொழிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறத்துவங்கியுள்ளது.Audio

வியாழனன்று இரவு அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்கள் உலமாக்கள் முன்னிலையில் சத்திய உறுதி மொழிகளை எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழிகளில் கீழ்கண்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

“இத்தேர்தலில் வெற்றி பெறுமிடத்து மாகாண சபைக்கு உள்ளும் வெளியிலும் கட்சிக்கும் தலைவர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்திற்கும் மிகவும் விசுவாசமாக நடந்து கொள்வேன் என்றும் எக்காரணம் கொண்டும், எந்த நிலையிலும் கட்சியை விட்டு விலகவோ கட்சியின் கட்டுப்பாட்டை மீறவோ, துரோகமிழைக்கவோ மாட்டேன் என்றும், பணத்திற்கோ, பதவிகளுக்கோ ஆசைப்பட்டு கட்சியையும், தலைமைத்துவத்தையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் எனது சொந்த நலனை விட கட்சியினதும் சமூகத்தினதும் நன்மையை முதன்மைப் படுத்துவேன் என்றும், எனது முன்னிலையிலுள்ள உலமாக்கள் சாட்சியாக சத்தியம் செய்கின்றேன். எனது கூற்றுக்கு “அல்லாஹ்வும் சாட்சியாக இருக்கிறான் ” என்கிற இந்த வாசகங்களடங்கிய உறுதிமொழிகளை வேட்பாளர்கள் தனித்தனியாக மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பங்காளிக் கட்சியாக இருந்தாலும், கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இது தனித்து போட்டியிடுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கும் அக்கட்சிக்குமிடையிலான உறவிலும் ஒரு வித சுமூகமற்ற சூழ்நிலை தேர்தல் பிரச்சாரங்களில் காணக் கூடியதாக உள்ளது. மாகாண சைபத் தேர்தலில் வெற்றி பெறும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒரு சிலர் அரசாங்கத்திற்கு ஆதரவாக போய்விடலாம் என்ற அச்சமும் சந்தேகமும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியல் காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே இந்த தீர்மானத்தை அக்கட்சி எடுத்திருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அதேசமயம், இத்தகைய உறுதிமொழி எடுப்பதில் தவறில்லை என்றும், இந்த நடைமுறையை தங்கள் கட்சி இதற்கு முன்னரும் கடைபிடித்திருக்கிறது என்றும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி. அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

பிபிசி தமிழோசை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் குறுக்கு விசாரணையை கேட்க 

Audio மாற்று மீடியா வடிவில் இயக்க

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 இல் 11:09 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. தலைவர் விரட்டி அடிக்கபட்ட வடமாகாண முஸ்லிம்களை இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் என புறியாணி பார்சலுக்காய் பிரபாகரனுக்கு வரலாற்றை மாற்றி அமைக்கும் உரிமையை விற்று விட்டு வந்தது போல் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தனியான இனம் அல்ல தமிழ் பேசும் இஸ்லாமியர் தமிழர்களின் ஒரு பகுதியினர் என கூட்டமைபுடன் ஏற்றுகொண்டு ஒப்பந்தம் செய்து வந்தாலுமா இவர்கள் தலைவருக்கும் கட்சிக்கும் விசுவாசமாக இருந்து சமூகத்தை ஒட்டுமொத்தமாக விப்பவர்களாக இருப்பார்கள்???

    PMAMF Mohammed H.I.R.A.Z

    செப்ரெம்பர் 1, 2012 at 4:57 முப

  2. ஒரு புறம் “முபாஹலா” வாம் இன்னொரு புறம் “பைஅத்” தாம் !!! என்ன சுத்த அபத்தமாக இருக்கின்றது….முஸ்லிம் காங்கிரசின் தலைவர் என்ன இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் அமீரா இப்படி பைஅத் வாங்குவதற்கு ?…… கேவலம் தம் அற்ப சொற்ப சுகங்களுக்காக இந்தப் பேரம் நடக்கின்றது. வாக்காளர்களை முட்டாள்களாக்குவதற்கு இந்த பைஅத் ஏற்படுத்தப்படுகின்றது ! ஏன் இந்த போலி வேஷங்கள் இதற்கு தானே உங்கள் கட்சியின் யாப்பு என்று ஒன்றை வைத்திருக்கின்றீர்கள்…..கட்சியின் கொள்கைகளை மீறிச் செயற்படுபவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அதில் கூறப்படவில்லையா?. அப்படி எதுவும் கூறாத யாப்பு என்றால் அதனை குப்பையில் போடுங்கள் அல்லது கடலை வியாபாரிகளுக்காவது அவற்றைக் கொடுத்து விடுவது மிக்க மேலானதாகும். அது சரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் யாரிடம் பைஅத் செய்தார் யூ என்பியின் துணைுயுடன் வந்து அரசியல் சோரம் போனது ஏன் “பைஅத்” செய்யாதததனாலா ?

    Ossan Salam - Doha

    செப்ரெம்பர் 1, 2012 at 3:37 பிப

  3. சமூகத்தில் ஏற்பட்டுள்ள இஸ்லாமிய சிந்தனை எழுச்சியின் தாக்கத்தின் விளைவுகள்தான் இஸ்லாமிய அரசியல் என்றால் என்வென்று தெரியாத இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள். சில இஸ்லாமிய நடைமுறையை ஏற்றுகொள்வதால் மட்டும் நீங்கள் இஸ்லாமிய சிந்தனையை கொண்ட அரசியல் கட்சியாக ஆகிவிடமுடியாது.

    Abdul Rasheed

    செப்ரெம்பர் 1, 2012 at 5:39 பிப

  4. தலைவரே,
    மேற்படி சத்தியத்தை உறுப்பினர்களிடம் பெற உங்களுக்கிருக்கும் யோக்கியதை பற்றிச்சிந்தித்தீர்களா? நீங்கள் கட்சிக்குவிசுவாசமாக இருந்து கொண்ட சந்தர்ப்பம் ஒன்றைக்கூற முடியுமா? துமிழ்கூட்மைப்பு, நோர்வே, இந்திய ‘ரோ’ யு.என்.பி போன்ற முஸ்லிம் விரோத சக்திகளின் இனிப்புக்காட்டலுக்கு விலைபோகாதிருக்க உங்களிடம் ஒருலட்சம் பையத்தை வாக்குப்போடும் கிழக்கு மக்கள் வாங்க வேண்டுமே!!!!. இப்பெது கூட அரசின் அங்கமாக இருந்து கொண்ட தானே கல்முனையில் ஒன்றும், ஹபரணைக்கு வெளியில் ஒன்றும் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்!ளூசூகூமூடூரூழூ()_10|
    பையத்செய்த போராளித்திலகங்களே இதே பையத்தை முதலில் முன்னுதாரணமாக தலைவரைசெய்யச்செய்தீர்களா? ஏற்கனவே அவர் வெற்றிலையில் இருந்து கொணடு எப்படி உங்களிடம் வெற்றிலைக்குப்போகமாட்டேன் என்று பையத் வாற்குவார்??? மு.கா.வில் மாற்றியோசிப்பவர்களுக்கும், கேள்விகேட்பவர்களுக்கும், தைரியசாலிகளுக்கும், ரோசமுடையோருக்கும் பஞ்சமா???
    குடும்ப ஆட்சியை வீட்டுக்கணுப்ப அன்னப்பறவைக்குப் போடுங்கள் என்று சொல்லிவிட்டு வெறும் அமைச்சுச்சுகங்களுக்காக சோரம்போன தலைவரிடமா பையத் செய்துள்ளீர்கள். இது செல்லுபடியாகுமா? மாற்றமடியாததாகுமா?

    roshaen

    செப்ரெம்பர் 2, 2012 at 8:38 முப


பின்னூட்டமொன்றை இடுக