Lankamuslim.org

கொம்பனத்தெரு மஸ்ஜிதுகளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ??

leave a comment »

கொழும்பு கொம்பனத்தெரு பகுதியில் அமைத்துள்ள பல ஜும்மாஹ் மஸ்ஜிதுகளுக்கு சென்ற தம்மை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்துகொண்ட சாதாரன உடையணிந்த நபர்கள் அங்கு மஸ்ஜித் நிர்வாக உறுபினர்களை அழைத்து விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் செய்திகள் வெளிவந்துள்ளன இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது இந்த விசாரணையின் போது தொழுகைகளுக்காக மஸ்ஜிதுக்கு எந்த வகையான நபர்கள் வருகை தருகின்றார்கள் , மஸ்ஜிதுகளின் வருமான மூலங்கள் என்ன ?, மஸ்ஜிதுகளின் சொத்துகள் எங்கு எங்கு உள்ளது ? பற்றிய விபரங்கள், கொம்பனத்தெரு முஸ்லிம்களின் தொகை என்ன? வெளிநாடுகளிலிருந்து உதவி கிடைக்கப் பெறுகின்றதா ? உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பல கேள்விகளை எழுபியுள்ளனர் என்று நாம் தொடர்புகொண்ட எம்மை இது பற்றி தொடர்புகொண்ட நபர்களும் இந்த சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

இது பற்றி லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் செய்தியை பதிவு செய்துள்ளதுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்த நடவடிக்கை கொம்பனத்தெரு முஸ்லிம்கள் மத்தியில் அச்ச உனர்வை ஏற்படுத்தியுள்ளது சட்ட விரோதமானவை என்று கூறி 20 கும் அதிகமான முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் தகர்க்க பட்டமையை தொடர்ந்து இந்த மஸ்ஜிதுகள் விசாரணை விரிவாக பார்க்க நடாத்தபட்டுள்ளமையானது சந்தேகத்தை எழுபியுள்ளதுடன் ஒரு குறித்த பகுதியில் உள்ள பல மஸ்ஜித்களில் இவ்வாறான இராணுவப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக பதிவாகியுள்ளதாக பார்க்க படுகின்றது

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலான , மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுரஹ்மான் ஆகியோருக்கு கொம்பனித் தெரு பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது என்று தெரிவிக்கபடுகின்றது .

Written by lankamuslim

ஜூன் 17, 2010 இல் 2:45 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக