Lankamuslim.org

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இணையப் போகிறதா ?

with 7 comments

யாழ்பாண உதயன் பத்திரிகையின் 23.06.2012.இன்றைய செய்தி :’நில மீட்புப் போரில் மு.காவும் கூட்டமைப்புடன் குதிக்கிறது; கட்சித் தலைமை அதிரடி முடிவு:’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தி : வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் சாத்வீக வழியிலான ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரிகின்றது.

வடக்கைப் போன்று தற்போது கிழக்கிலும் அரசு திட்டமிட்ட அடிப்படையில் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் இவ்வாறானதொரு முடிவை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது. கிழக்கில் எமது மக்களின் காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் அரசிடம் சுட்டிக்காட்டியும் உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாகவே போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது என மு.காவின் முக்கிய பிரமுகரொருவர் நேற்றுமாலை “உதயனி’டம் தெரிவித்தார்.

இதுவிடயம் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் விரைவில் முக்கிய பேச்சுகளில் ஈடுபடவுள்ளன என்றும் அவர் கூறினார். இந்தக் கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் இரு கட்சிகளும் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டங்களை வடக்கு கிழக்கில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடு திரும்பிய பின்னர் இரு கட்சிகளும் சந்தித்துப் பேசும் எனவும் அறியமுடிகின்றது.

Written by lankamuslim

ஜூன் 23, 2012 இல் 8:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

7 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. கிழக்கு மாகாண சபை தேர்தலினை இலக்கு வைக்கும்
    அரசியல் கட்சிகளின் இராஜ தந்திர நகர்வுகளினை அவதானிக்கும்
    போது பல கட்சி தாவல்கள் எதிர்காலத்தில் நிகழ இருப்பது நிதர்சனமானது.

    பலமான வாக்கு வங்கியினை கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸினை
    அரசு புறக்கணித்திருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலில்
    போட்டியிட இருப்பதனால், மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு வெகுவாக
    சரிந்திருக்கும் நிலையில்,அரசு தேர்தல் நடத்த தீர்மானிப்பது தற்கொலைக்கு ஒப்பானது.

    TMVP, தேசிய காங்கிரஸ், தேசிய முஸ்லிம் காங்கிரஸ் போன்றவைகளின்
    ஆதரவினை கொண்டிருந்த போதிலும் முதலமைச்சர் பதவி என்பதில்
    எற்படும் முரண்பாட்டினை தீர்ப்பதானது கடந்த முறை போன்று இலகுவாக அமையாது.
    எனவே அரசின் கழுகு கண்கள் மக்கள் செல்வாக்கு கொண்ட எதிரணி உறுப்பினர்களின்
    மேல் விழுவது வியப்பில்லை. ஆசை வார்த்தைகளினை விட்டு கட்சிகளினை உடைப்பது தான்
    கைவந்த கலை அல்லவா?
    முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அரசுடன் முரண்பட்டு கொண்டதன் காரணமாக
    இந்த முறை இழக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனையோ!

    nijah1

    ஜூன் 23, 2012 at 9:54 பிப

    • அதுதான் நடக்கப்போவது. வாழ்நாள் பசிக்கு உணவழிக்காமல் சில நாள் பசிக்கு உணவழித்து மிகுதி நாட்களை பட்டினியில் சாவா விடுவார்கள். அதற்கு நமது சில சுயல முனாபிக்குகள் உதவுவார்கள்.

      Fasly - Balapitiya

      ஜூன் 24, 2012 at 4:53 பிப

  2. காணி நிலம் விசயத்தில் அரசதரப்பைவிட தமிழ்தரப்பாலேயே கிழக்கு மாகாணமுஸ்லிம்கள் மிக நெருக்கடிகளையும் கஷ்டங்களையும் அனுபவிக்கின்றனர் ஆயிரகணக்கான மட்டகளப்பு முஸ்லிம்களுக்கு சொந்தமான ஏக்கர் நிலங்கள் மேச்சல் நிலங்களாக தமிழ் கூத்தமைபின் ஆலோசனைகமையவே அரச உயர்பதவிகளில் உள்ள மட்டகள்ப்பு தமிழர்களால் மாற்றி அமைக்கபட்டிருக்கிறட்து மேலும் கல்லடி தொடக்கம் கழுவாஞ்சி குடிவரை பறந்திருந்த காதான்குடியில் நிலபரப்பு வெறும் மூன்ரே முக்காள் சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் முடக்கபட்டு குப்பை கொட்டவும் நிலமின்றி சுகாதாரவாழ்வும் சவாலாகி இருக்கும் இந்த நிலையில் ஒரு கிலோமீட்டர் சும்மா கிடக்கும் நிலத்தை கூட கொடுக்க மனமில்லாத தமிழ் கூட்டமைப்புடன் சேர்வதால் முஸ்லிம்களுக்கு என்ன பயன் கிடைக்கும்???

    கிழக்கு பல்கலைகழகத்தில் கனிசமான முஸ்லிம்கள் கல்வி பயில்கின்றனர் அதுவும் குறிப்பாக மருத்துவதுறையில் பெரும்பான்மையான மாணவர்கள் முஸ்லிம்கள் ஆனால பல்கலைகழக கவுன்சிலுக்கு ஒரு முஸ்லிம்கூடி விட்டார் என்பதட்காக ஒட்டு மொத்த பல்கலைகழகத்தையும் கூத்தமைப்பு தூண்டிவிட்டிருக்கும் இந்த நிலையில் கூத்தமைபுடன் சேர்ந்து இன்னும் பொல்லை கொடுத்து அடிவாங்கவா???

    மட்டகளப்பு போதனா வைதிய சாலையின் ஒரு பிரிவை தட்காளிகமாக காத்தான்குடி ஆதாரவைதிய சாலைக்கு மாற்றுவதை ஜீரனிக்காது கிழர்தெழுந்து இனவாதம் கக்கும் தமிழ் கூட்டமைப்புடன் கரம் கோர்த்து ஒட்டு மொத்த முஸ்லிம்களின் வளங்களையும் வாழ்வையும் சீரழித்து சின்னாபின்னமாக்க வழிகோள்வதா???

    தமிழர்கள் போல் முஸ்லிம்கள் தங்கள் நிலங்களிலும் வாழ்விடங்களிலும் தங்களை சுயமே நிர்வகிக்க உரிமை உடையோர் என்பதை ஏட்காத கூட்டமைப்புடன் கூட்டு சேர்ந்து தமிழர்தான் முஸ்லிம்களை நிர்வகிக்கும் தகுதி உடையோர் என்பதை உலகிக்கு நாங்களே சுயமாக அறிவிட்பு செய்யவா இந்த கூட்டு???

    Mohammed Hiraz

    ஜூன் 23, 2012 at 11:32 பிப

  3. எல்லாம் முடிந்து இப்பொழுது, கூத்தமைப்புடன் கூடிக் குலாவுகிறது.

    முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தை தற்கொலைக்கு இட்டுச் செல்கிறது.

    muslim

    ஜூன் 24, 2012 at 4:38 பிப

  4. ௭ம்.ஐ.௭ம். முஹியத்தீன்

    1931ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் நேரடியான மக்கள் வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதியாக சேர் மாக்கான் மாக்காரே தெரிவு செய்யப்பட்டார். இவர் தெரிவுசெய்யப்பட்டது மட்டக்களப்பு தெற்கு தொகுதியாகும். மட்டக்களப்புத் தெற்குத் தொகுதி ௭ன்றால் காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசமாகும். 1931 இல் தொகுதி ரீதியான தேர்தல் நடைபெற்ற போது இலங்கையில் மூன்று தொகுதிகளில் முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினால் நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பக்கூடிய வாய்ப்பு இருந்தது. மட்டக்களப்புத் தெற்கு, புத்தளம், மத்திய கொழும்பு ஆகியன அத் தொகுதிகளாகும். ஆனால் தேர்தல் முடிவின்படி மட்டக்களப்புத் தெற்குத் தொகுதியில் மாத்திரம்தான் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தெரிவானார். முதன்முதலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் சட்டசபைப் பிரதிநிதி கிழக்கு மாகாணத்திலிருந்தே தெரிவு செய்யப்பட்டார் ௭ன்பது மிகவும் முக்கியமாகிறது. இதன் பின் நிகழ்ந்த தொகுதி மாற்றங்களின்படி முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் இலங்கையில் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு பல தொகுதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்கு தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டவை கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், புத்தளம், மூதூர், மன்னார், கொழும்பு, பேருவளை, அக்குறணை தொகுதிகள் ஆகும். புத்தளம் தொகுதியைத் தவிர ஏனைய தொகுதிகள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், தொகுதிகள் தான். மற்றவை பல அங்கத்தவர் தொகுதிகளாகத்தான் அடையாளம் காணப்பட்டன. இந்த வரலாற்றை நினைவுகூர வேண்டிய அவசியம் இன்று மீண்டும் ஏற்பட்டுள்ளது. இலங்கை முஸ்லிம்களின் மூன்றில் ஒரு பகுதியினர் கிழக்கில் வாழ்கின்றனர். மூன்றில் இரண்டு பகுதியினர் தென்னிலங்கையிலும் வடமாகாணம் முழுவதிலும் சிதறி வாழ்கின்றனர். மூன்றில் ஒரு பகுதியினராகவுள்ள கிழக்கு முஸ்லிம்களிடம் உள்ள அரசியல் பலம், அவர்களின் வரலாற்று வாழ்விடம், புவியியல் அமைப்பு சார்ந்த சனத்தொகைச் செறிவேயாகும். இந்த நிலையில் தனித்துவமான முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தென்னிலங்கையில் ௭ண்ணிக்கூடப் பார்க்கமுடியாது. விகிதாசாரத் தேர்தலின் அடிப்படையில் பார்த்தால் கொழும்பு, புத்தளம், கண்டி மாவட்டங்களில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து தனித்துவமான முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்காக வாக்களித்தால் இம்மாவட்டங்களிலிருந்து பிரதிநிதித்துவம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் கடந்த பல பொதுத்தேர்தல்கள் முடிவுகளின் படி இம்மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய தேசியக் கட்சிகளை ஆதரிப்பதிலேயே ஆர்வம் கொண்டிருக்கின்றனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2004ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுடன் ஆறு பொதுத் தேர்தலை இதுவரை சந்தித்துள்ளது. இந்த ஆறு பொதுத்தேர்தலிலும்கூட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தென்னிலங்கையில் ஒரு நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக்கூடப் பெறமுடியவில்லை. இலங்கை முஸ்லிம்களின் அரசியல், அபிலாஷைகள், அரசியல் தேவைகள், சூழலின் நெருக்கடிகள் போன்ற காரணிகளை மறுதலித்துவிட்டு அவர்களை ஒரு தனித்த அரசியல் அடையாளத்தின் கீழ் ஒரு போதுமே முன்னெடுக்க முடியாது! இலங்கை முஸ்லிம்களுடைய அரசியலில் பலவாறான வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிழக்கு முஸ்லிம்கள் தனித்த போக்காகவும் தென்னிலங்கை வடமாகாண முஸ்லிம்கள் வேறு போக்காகவுமே ௭ப்போதும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக இலங்கையில் ஒரு தனித்த இனமாக முஸ்லிம்கள் தங்கள் பொது அடையாளத்தின் மூலம் ஒன்றுபடும் அதே நேரம், இம்மக்களுடைய அரசியலை அதனுடைய நியாயமான கோரிக்கைகளை ஒரு பொதுத் தளத்தில் ௭ப்போதுமே சந்திக்க வைக்க முடியாது இருந்திருப்பதை சுதந்திரத்திற்கு பின்னான இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் கண்டுவருகிறோம். 1989 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற பிரவேசத்திற்கு முன் தென்னிலங்கை அரசியல் தலைமைகளே, இலங்கை முஸ்லிம்களின் ஏகபோக அரசியல் தலைமையாக அரசியல் நடாத்திக் கொண்டிருந்தன. இந்தத் தலைமை முஸ்லிம்களின் உணர்வுகளை முற்றாகப் பிரதிபலிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையாக இல்லாது விட்டாலும் கூட தென்னிலங்கை முஸ்லிம்களின் நலனில் அதிக அக்கறை கொண்டிருந்தது. இன்னொரு வகையில் சொல்வதானால் அத்தலைமைகளின் கூடிய அக்கறை தென்னிலங்கை முஸ்லிம் நலன் சார்பானதாகவே இருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கான வரலாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் முதல் அரசியல் பிரவேசம் 1977 இல் கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணியிலேயே ஆரம்பித்தது. 1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தென்னிலங்கை அரசியல் தலைமையை ௭திர்த்து தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து கல்முனை, சம்மாந்துறை, மூதூர் போன்ற முஸ்லிம் தொகுதிகளில் இக்கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே இப்பிரசாரத்தில் முக்கிய பங்காற்றினார் ௭ன்பதை யாவரும் அறிவர். அதில் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு அரசியல் தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட வேண்டும் ௭ன்பதே பிரதான தேர்தல் கோஷமாகவிருந்தது. பின் 1981 இல் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் வந்தவுடன் கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணியில் இருந்தவர்கள் ஸ்ரீமாவுடன் ஐக்கியமாகிவிட அஷ்ரப் தனித்துவிடப்பட்டிருந்தார். ஆனால் அஷ்ரப் அவர்கள் தனித்து நின்று தமிழர் கூட்டணியுடன் – கிழக்கிலங்கை முஸ்லிம் ஐக்கிய முன்னணி கூட்டு வேட்பாளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் ௭ன்பதாகும். இக்கோரிக்கையை தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்தது. இது அஷ்ரப்பை மிகவும் பாதித்தது. தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழ்த் தலைமைகள் இரண்டையும் நம்பமுடியாது. கிழக்கு முஸ்லிம்களுக்கு உடனடியாக தனிக்கட்சி அமைக்கவேண்டுமென்ற ௭ண்ணமே மக்கள் மத்தியில் ஏற்பட்டது. அஷ்ரப் இதனைக் காரிய சித்தமாக்கும் சுக்கானைப் பிடிக்கத் தொடங்கினார். அவரின் முதல் கோஷமே இப்படித்தான் இருந்தது. ‘கிழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க ஆட்சி அதிகாரத்தில் ௭வருமில்லை.’ 1987 இல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்ட போது கிழக்கில் 17 மாகாணசபை உறுப்பினர்களும் தென்னிலங்கையில் 12 மாகாண சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இத்தேர்தலில் போட்டியிடவில்லை) ஆனாலும், பின்வந்த ௭ந்த மாகாணசபைத் தேர்தலிலும் தென்னிலங்கையில் முஸ்லிம் காங்கிரஸால் இப்படி வெற்றிபெற முடியாமல் போய்விட்டது. இதற்கான பிரதான காரணம் தென்னிலங்கை முஸ்லிம் மக்களின் அரசியல் தேவையும் உணர்வும், சூழலும் கிழக்கு முஸ்லிம்களிடமிருந்து மிக வேறுபட்டு நிற்பதேயாகும். கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்காக தோற்றம் பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது நாடாளுமன்ற அரசியல் சிதனைத் திசைமாற்றப் போக்கால் அதன் அரசியலை தென்னிலங்கைக்கும் வியாபித்ததன் காரணமாக கடந்த 17 வருடங்களில் அதனுடைய அரசியலில் கிழக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பு, காணிப்பிரச்சினை, மீள்குடியேற்றம், அதிகாரப்பகிர்விற்கான அலகு ஆகியவற்றில் ஆக்கபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து அக்கோரிக்கைக்காக உறுதியாகச் செயலாற்ற முடியாது போயிருப்பதையும் காண்கிறோம். தென்னிலங்கை அரசியலில் கால் வைத்ததன் காரணமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் விடயத்தில் ஆக்கபூர்வமாகச் செயற்படமுடியாமல் போய்விட்டது. தென்னிலங்கையில் அது தமது அரசியல் கோரிக்கையை அடக்கியே வாசித்தது. இத்தவறை முஸ்லிம் காங்கிரஸ் விடாது போயிருந்தால் ஒருவேளை அக்கட்சி கிழக்கு முஸ்லிம்களின் இனப்பாதுகாப்பு விடயத்தில் ஆக்கபூர்வமாகப் பணியாற்றியிருக்க முடியும். ௭ப்போதும் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கிற்கு வெளியில் அதனுடைய நாடாளுமன்ற அரசியலை முன்னெடுத்ததில்லை. அக்கட்சி தென்னிலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியலை அவர்களே தீர்மானிப்பதற்கும் மலையகத் தமிழ் மக்களின் அரசியலை மலையகத் தமிழர்களே தீர்மானிப்பதற்கும், வழிவிட்டே தமிழ் தேசிய போராட்டத்தை வலியுறுத்தி வருகின்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை அடிப்படை நோக்கங்களிலிருந்து திசைமாறும் போக்கு, அதனுடைய சந்தர்ப்பவாத அரசியல் நாடாளுமன்ற பிரவேசத்துடன் தொடங்கிவிடுகிறது. ௭க்கட்சியினை அது ௭திர்த்ததோ, ௭ந்த முஸ்லிம் பிரதிநிதிகளைக் கையாலாகாத பேசாமடந்தை ௭ன்றதோ அதைவிட மிக மோசமாக தென்னிலங்கை சந்தர்ப்பவாத அரசியலுடன் அது சமரசம் செய்து கொண்டது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தென்னிலங்கை சார் தலைமையின் பண்புப்போக்கை படிப்படியாகப பெறத்தொடங்கியது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சி ௭ன்றும் இன்றைய காலகட்டத்தில் அப்படியான ஒரு இனவாத அரசியல் கட்சி இலங்கை முஸ்லிம்களுக்கு உகந்ததல்ல ௭ன்றும் தலைவர் அஷ்ரப் பகிரங்கமாக விமர்சித்தார். இதனால் தேசிய ஐக்கிய முன்னணியாகவும், அமைச்சர் பதவியுமாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் போக்குகள் திசை திரும்பின. ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ௭திராக நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாப் பிரேரனை முன்வைக்கப்பட்ட போது முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் அஷ்ரப், அம்பாறைக் கரையோர மாவட்டம், கிழக்கு முஸ்லிம்களின் முக்கிய காணிப் பிரச்சினைகள் தீர்வுக்கான கோரிக்கை ௭தையும் முன் வைக்காமல் அப்துல் மஜீத், மன்சூர், மஹ்ரூப் ஆகியோர் அப்போது நடைபெறவிருந்த பொதுத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸை ௭திர்த்துப் போட்டியிடக்கூடாது ௭ன்பதைத்தான் முன்வைத்து ஜனாதிபதி பிரேமதாசவுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். இந்த கோரிக்கைக்கு அமைவாக அப்துல் மஜீத், மன்சூர், மஹ்ரூப் ஆகியோர் தேர்தலில் போட்டியிடாமலே தேசியப்பட்டியல் மூலமாக நாடாளுமன்ற அங்கத்தவர்களாகவும், அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் பெரும் அனுகூலமாக அமைந்ததேயன்றி முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு ௭ந்தவிதத் தீர்வும் ஏற்பட உதவவில்லை. கிழக்கு முஸ்லிம்கள் வடமாகாண, தென்னிலங்கை முஸ்லிம்களிடம் தமது கருத்தினை மிகத்தெளிவாக முன்வைக்க வேண்டியவேளை வந்துள்ளது. கிழக்கு முஸ்லிம்களின் அரசியலையும் தென்னிலங்கை முஸ்லிம்களின் அரசியலையும் மிக வெளிப்படையாக வேறுபடுத்திப்பார்க்கவே அது நிர்ப்பந்திக்கிறது. மேலும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டினையும் புறக்கணிக்காது வடக்கு முஸ்லிம்களை அவர்களுடைய அரசியலை தீர்மானிக்கும் உரிமையினையும் அங்கீகரிக்கிறது. இப்போக்கினால் மட்டுமே முஸ்லிம்களுக்கான இனத்துவப் பாதுகாப்புத் தீர்வினைப் பெறமுடியும். முஸ்லிம்களைத் தென்னிலங்கையிலும், வடமாநிலத்திலும் சூழ்ந்துள்ள இனவாத ஆபத்திலிருந்து காப்பாற்றவும், சுதந்திரமாகக் குரல் கொடுக்கவும் முடியும். மாறாக இவை அனைத்தையும் நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்காகவும் மந்திரிப்பதவி மற்றும் குடும்ப நலனுக்காகவும் ஒரு சட்டியில் போட்டுத்தான் சாம்பாராக ஆக்குவோம் ௭ன்றால் இலங்கையில் வாழும் ௭ந்த முஸ்லிமுடைய உரிமையையும் பாதுகாக்க முடியாமல் போய்விடும்.

    ௭ம்.ஐ.௭ம். முஹியத்தீன்

    ஜூன் 24, 2012 at 7:13 பிப

  5. Really i am worry about one of brother comments.he don’t like Muslims become a unity in this Nation. He is far from Islamic faith

    Hathafy

    ஜூன் 25, 2012 at 1:19 முப


பின்னூட்டமொன்றை இடுக