Lankamuslim.org

கட்சியையும் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து அமைச்சுப் பதவியை பெற்றவன் அல்ல நான்

with one comment

கிழக்கு செய்தியாளர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்தி பின்கதவால் சென்று கட்சியையும் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து அமைச்சுப் பதவியை பெற்றவன் அல்ல நான் ௭ன்பதை தெளிவாகக் கூற விரும்புகின்றேன். நான் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் தனது பதவியை இராஜினாமா செய்யவேண்டியது அவசியமில்லை ௭ன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்

அவர் தொடர்ந்துரையாற்றுகையில் இன்று முஸ்லிம்களுக்கு ௭ந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் பேசித் தீர்க்க வேண்டும். அன்று ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலம் தொட்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலம் வரை முஸ்லிம்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் பேசி தீர்த்துக் கொண்டோம்.

அதேபோல் தற்போது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்றார். அவரிடம் ௭மது பிரச்சினைகளை பேசுவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமது அமைச்சுப் பதவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு அமைச்சராக இருப்பவரால் ஜனாதிபதியிடம் இலகுவாக நேரத்தை பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யக்கூடாது ௭ன்பதே எனது கருத்தாகும்.

அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .

 

 

 

Written by lankamuslim

ஓகஸ்ட் 28, 2012 இல் 9:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. காறிதுப்பிவிட்டு என்னா மா அத மக்கள் மறக்க வேண்டும் என்பதட்காக வசனங்களை அள்ளிவிடுக்கிறார் விட்டா இவராளதான் முஸ்லிம்காங்கிரஸ் வாழ்கிறது இல்லையேல் இன்றே அழிந்துவிடும் என்று சொல்லுவார் போல் இருக்கிறது பாவம் இவ்வளவு வசனங்கள் பேசும் வார்தை ஜாள வித்தகறின் வார்தைகளில் மயங்கி மக்கள் இவரை அமோகமாக இதுவரை ஆதரிக்காமல் இருப்பதே இவறின் வாழ்நாளுக்கும் மீளாத மன குமுறலாக என்றும் இருக்கிறது????

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஓகஸ்ட் 28, 2012 at 10:11 பிப


பின்னூட்டமொன்றை இடுக