Lankamuslim.org

வரட்சி நிவாரண நடவடிக்கையில் அமைச்சர் றிசாத்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் 7600 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ள்பட்டுள்ள நிலையில், தற்போது எற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக 1060 ஏக்கர் வரை விவசாயம் அழிந்து போயுள்ளது குறித்தும் ஏஏனைய 6340 ஏக்கர் நிலப்பரப்பினை பாதுகாப்பது குறித்தும் நானாட்டான் அபிவிருத்தி குழுவினரும்,கட்டுக்கரை குளத் திட்ட முகாமைத்துவ குழுவினரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சரின் இணைப்பு செயலாளர் அலிகான் ஷரீப் தெரிவித்துள்ளார்.

தற்போதை நிலை குறித்து நன்கு கேட்டுக் கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,இவ்விடயம் குறிதது உரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் உடன் தொடர்பு கொண்டு இப்பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கான நிவாரணம் மற்றும் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும்,மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளதாகவும் கூறினார்.

தற்போதைய வரட்சி சூழலில் ஆழ் துணைக் குழாய் கிணறுகள்,நீர் இறைக்கும் இயந்திரங்கள்,என்பனவற்றினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் தற்போதை பாதிப்புக்களைிலிருநு்து விவசாயிகளை ஓரளவு பாதுகாக்க முடியும் என்றுமு் அமைச்சர்,சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவம் இணைப்பு செயலாளர் அலிகான் ஷரீப் மேலும் கூறினார்.

அதே வேளை புத்தளம் வேப்பமடு பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் இந்த வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் ஏ.ஆர் .அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பது குறித்து,பிரதேச விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி அதிகாரி, மற்றும் விவசாய உதவி பணிப்பாளரின் சிலாபம் தலைமை அலுவலகம் என்பவற்றுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையினை மேற் கொண்டுள்ளார்.இதன் மூலம் 75 விவசாயக் குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 இல் 2:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக