Lankamuslim.org

ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில், ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத்திற்கு ஆதரவு திரட்டி பெண்களை சந்திப்பதற்காக வீடு வீடாகச் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாற்பது பெண்கள் மீது இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தின் பிரதான அரசியல் கட்சியொன்றின் ஏறாவூர் வேட்பாளரின் குண்டர்களால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் மூவர் பலத்த பாதிப்புக்குள்ளாகி ஏறாவூர் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப் படுகிறது .

ஏறாவூரை சேர்ந்த , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளரின் குண்டர்களே தம்மீது இத் தாக்குதலை மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

திடீர் தாக்குதலின் விளைவாக அதிர்ச்சிக்குள்ளாகி சுய நினைவு இழந்திருந்த பெண்களில் சிலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதோடு, நாளங்கள் ஊடாக சேலைன், டெக்ஸ்ட்ரோஸ் (குளுகோஸ்) என்பனவும் பாய்ச்சப்பட்டதாக ஆஸ்பத்திரி வட்டாரத்திலிருந்து தெரியவருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளருக்கும், தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த மாற்றுக் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்களான குண்டர்கள் சிலரே தம்மீது மிகவும் கீழ்தரமான முறையில் தாக்குதல் நடத்தியதாக கூறிய பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர், தாக்குதலில் ஈடுபட்டோர் தம்மை ஓர் அறைக்குள் தள்ளி பலாத்காரம் பிரயோகிக்க எத்தனித்ததாகவும், தங்களது கழுத்திலும், காதுகளிலும் அணிந்திருந்த ஆபரணங்கள் சிலவற்றை அவர்கள் பறித்தெடுத்ததாகவும் கூறினர்.

இவ்வாறு சென்ற பெண்களில் அநேகமானோர் திருமணமானவர்கள் என்றும், சிலர் மணமுடிக்காதவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் அநேகர் பர்தா, ஹிஜாப் அணிந்து காணப்பட்டனர்.

தேர்தல் தினம் மிகவும் நெருங்கி வரும் வேளையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் செல்வாக்கைத் தொடர்ந்தே குறிப்பாக பெண்கள் மத்தியில் பீதி மனப்பான்மையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களது வாக்களிப்பு வீதத்தை குறைக்கும் அச்சுறுத்தும் நடவடிக்கையாகவே இத் தாக்குதல் நடவடிக்கை அந்த அப்பாவிப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கட்சியின் பிரதான வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 30, 2012 இல் 9:12 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக