Lankamuslim.org

முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டங்களில் ஏன் முஸ்லிம் மாவட்ட செயலாளர்கள் இல்லை

with 2 comments

கிழக்கு செய்தியாளர் :  இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காது. ஆனால் கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்களை தீர்மானிக்கின்ற கட்சியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும். இவ்வேளையில், முதலமைச்சர் பதவியுடைய முக்கியத்துவம் பற்றி இப்போது கிலாசித்து பேசுகின்ற அளவுக்கு ௭ந்த முதலமைச்சர் பதவியைப் பற்றி பேசுவது. ஒரு பொம்மையான முதலமைச்சர் பதவியைப் பற்றிப் பேசுவதா? அல்லது அந்தஸ்துடன் உள்ள முதலமைச்சர் பதவி பற்றிபேசுவதா? என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் ஒருவர் இருக்கத்தக்கதாக ௭ந்த மாகாணத்திலும் இல்லாத ஆளுநரின் மேலாதிக்கம் கிழக்கு மாகாணத்தில் இருந்தது.ஆனால் இந்த நாட்டில் முஸ்லிம் ஆளுநர் ஒருவர் இருக்கின்றார். அந்த ஆளுநர் உள்ள மாகாணத்தில் ௭வ்விதமான மேலாதிக்கமும் கிடையாது.

அவர் சம்பிரதாயத்திற்காகவே ஆளுநராக இருக்கிறார். ஆனால் இவருக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்துக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்த்துக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இருக்கின்ற வித்தியாசமாகும். கிழக்கு மாகாணம் தவிர்ந்த வேறு ௭ந்த மாகாணங்களையும் ௭டுத்துக்கொண்டாலும் முதலமைச்சர் கையில் இருக்க வேண்டிய கல்வி மற்றும் காணி அதிகாரங்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆளும் சிறுபான்மை இனமான பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிகாரங்கள் அற்ற முதலமைச்சர் அவஸ்தையில் நாங்களும் பங்கெடுக்க வேண்டுமா? கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரம்பரியமாக தமிழர் ஒருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க முடியுமாக இருந்தால் ஏன் இம் மாகாணத்தின் ஏனைய இரண்டு மாவட்டங்களிலும் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவரை மாவட்ட செயலாளராக நியமிக்க முடியவில்லை. ஆப்பெடுத்த குரங்கு போன்று இப்போது ஆட்சிதரப்பு மாறியுள்ளதால் அவசரப்பட்டு ௭ந்த தீர்மானத்தினையும் ௭டுக்க முடியாதுள்ளது ௭னவும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 இல் 11:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. முஸ்லிமாக இருக்கும் மேல்மாகாண ஆளுனரால் சாதிக்க முடியாமல் இருக்கும் எதனை மாவட்ட செயலராக முஸ்லிம் பெயர் தாங்கி நிட்போர் இருந்தால் சாதிக்க முடியும் என்று எண்ணுகிறீர்கள்??? கடமையும் நீதியும் சமத்துவமும் இன மத சாதி வேறுபாடுகளால் வருமா??? எந்த இலங்கையனும் என்ன பொறுப்பில் இருந்தாலும் கடமை உணர்வு அவனுக்கு கல்வி முதல் கல்லூரி வரை ஊட்டி வளர்கபட்டால் அது இன மதம் பாராது நேர்மையாக என்றும் இருக்கும் நீதி அமசிசரே நீதிக்கு புறம்பான கோட்பாடுகளை பேசும் காலம் இது????

    PMAMF Mohammed H.I.R.A.Z

    செப்ரெம்பர் 1, 2012 at 5:02 முப

  2. THALAIVARE!
    VARA VARA UNGALATHU SITHTHA SUYATHEENATHTHIL MAKKALUKKU SANTHEHAM VALUTHTHUKKONDE VARUHIRATHU.EAN ENDRAAL, ARASAANGATHTHIDAM AMAICHCHUPPATHAVIYAI PETRUKKOLLUVATHATKU MUNPU NEENGAL JANAATHIPATHIYAI PAARTHU KETKA VENDIYA (MAAVATTA SEYALALAR, AALUNAR)KELVIYAI, NAANGAL UNGALIDAM KETKAVENDIYA KELVIYAI MEDAIYIL MIKKUKKU MUNNAAL MAKKALAIPPARTHUK KETKIREERHALL ENNA NADANTHATHU?! PORALIHALE! THANKATHTHALAIVAR KAVANAM VAARATHU VANTHA MAAAMANI KAVANAK THAVAMAI THAVAMIRUNTHU…(SORRY ITHATKUMEL THAMILAAL MUDIYATHU)

    roshaen

    செப்ரெம்பர் 2, 2012 at 8:52 முப


பின்னூட்டமொன்றை இடுக