Lankamuslim.org

Archive for திசெம்பர் 4th, 2010

புலி ஆதரவு அமைப்புகள் அடாவடித்தனம் எம்பி பைசல் காசிம் விரட்டப்பட்டார் !

leave a comment »

இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை  எம்பி  பைசல் காசிம் இன்று மதிமுக மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக  ஓட்டம் பிடித்தனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி.  பைசல்காசிம், அமைச்சர் ரிஷாத்  ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் இருந்தனர் ஆனால் அமைச்சர் ரிஷாத் இந்தியா செல்லவில்லை விரிவாக பார்க்க video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2010 at 9:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள்

leave a comment »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள் மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்றுள்ளது இந்த ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். மூதூர் பிரதேசதிலிருந்து முஸ்லிம்கள் 2006 ஆண்டு வெளியேற்றப்பட்டமை குறிபிடத்தக்கது இது தொடர்பான சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது

இன்றைய மூதூர் பிரதேச செயலகத்தில் 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலில் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Written by lankamuslim

திசெம்பர் 4, 2010 at 9:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் பஸ்ஸில் துப்பாகியை காட்டி மிரட்டியவர் மட்டகிப் பிடிக்கபட்டார்

leave a comment »

நீர்கொழும்பு பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பயணிகளை தமிழ் இளைஞர் என்று இனம் காணப்பட்ட ஒருவர் நேற்று மாலை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் அதை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற இவரை பிரயாணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இவர் புத்தளத்தை சேர்ந்தவர் என்றும் உறவினர்கள், நண்பர்கள் சிலரை சந்திக்கின்றமைக்காக சில நாட்களுக்கு முன் நீர்கொழும்புக்கு வந்திருந்தார் என்றும் தெரிய வருகின்றது. இவர் மதுபோதையில் இருந்துள்ளார் பஸ்ஸில் பயணி ஒருவருடன் தகராறு செய்து கொண்டதை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 4, 2010 at 8:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது