Lankamuslim.org

Archive for திசெம்பர் 14th, 2010

கம்பளையை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

leave a comment »

கம்பளை நகரை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கம்பளை நகர பிதா சரத் காமினி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கம்பளை நகரின் அபிவிருத்திக்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ண வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருகின்றார். கம்பளை நகரின் அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் பெருமளவு உதவியளிக்கவுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 5:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் அனைத்து உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும்

leave a comment »

மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். வெறுமனே ஒரு தரப்பால் மட்டும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பேசுபவர்கள் உண்மையான மனித உரிமை வாதிகளாகவோ அல்லது ஜனநாயகவாதிகளாகவோ இருக்க முடியாது

என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மனித உரிமைகள் இல்லத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொத்துவில் முஸ்லிம் தனியார், மற்றும் அரச காணிகளுக்கு அச்சுறுத்தல்

with one comment

பொத்துவில் 3 ஆம் பிரிவு சாய்வுத்தம்பி தோட்டப் பகுதியிலுள்ள புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் பௌத்த தேரர் ஒருவரினாலும் படையினராலும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பொத்துவில் பிரதேசசபை உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்துள்ளார் என்று பொத்துவில் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு எல்லை வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்றும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிம் வெளியாகியுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 5:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பாவனைக்குகந்ததல்ல

leave a comment »

மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் 90 வீதமானவை பாவனைக்குகந்ததல்லவென மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.மாத்தளை மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரை பரிசோதனைக்குட்படுத்தியபோதே இது கண்டறியப்பட்டது.

இந்த நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் மக்கள் நோய் வாய்ப்பட வேண்டிய நிலையேற்படும் என்றும் இந்த நீரை முறையாகச் சுத்திகரித்து அல்லது குளோரின் கலந்து மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 1:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் நோக்கி ஒரு பயணம்

leave a comment »

புலிபயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் வாழந்து வந்த யாழ் முஸ்லிம் மக்களின் ஒரு சிறு தொகுதியினர், மீண்டும் யாழ்பாணம் சென்று வாழ்வியல் சாத்திய கூறுகளை கண்டறியும் முகமாக இன்று காலை புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர்.

Sri Lankan Way என்ற அமைப்பினால் இதற்கான சுற்றுல்லா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் இரண்டு பஸ்களில் புறப்பட்டு குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக 150 குடும்பங்களின் தலைவர்கள்  பயணிக்கின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 10:38 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாவட்ட மட்டத்தில் 20 ஆங்கில ஆசிரியர் பயிற்சி நிலையங்கள்

leave a comment »

அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் மாவட்ட அடிப்படையில் 20 ஆங்கில ஆசிரியபயிற்சிநிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.குணசேகர தெரிவித்துள்ளார் .

இப்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் கற்பித்தல் வளவாளர்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் இதற்கான உடன்படிக்கையில் கல்வி அமைச்சும் இந்திய அரசும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 9:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது