Lankamuslim.org

Archive for திசெம்பர் 9th, 2010

இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு

leave a comment »

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் செய்தி நுட்பங்கள் என்னும் தலைப்பில் ஒரு ஊடக பயிற்சி வகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிகபட்டுள்ளது இந்த பயிற்சி வகுப்பு எதிர்வரும் ௧௮ ஆம் திகதி சனிகிழமை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளில் காரியாளையத்தில் நடைபெறவுள்ளது .

இளம் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரித்தல் மற்றும் உரிய முறையில் அறிக்கையிடுத்தல் தொடர்பாக பயிற்சி வழங்கும் நோக்கில் இந்த பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்துள்ளார் கலந்து கொள்ள விரும்புவோர் 0772612288 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தம்மை பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 10:39 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

leave a comment »

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் அதிவிஷேட சித்திகளைப் (3ஏ) பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வகையில் நாடளாவிய ரீதியில் 4,384 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் பாடசாலை ரீதியாக 3908 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 476 பேர் 3 ஏ பெற்றுள்ளனர்.உயிரியல் விஞ்ஞான பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 367 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 286 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 81 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 8:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த 50 க்கு மேற்பட்ட நாடுகள் முயற்சி

leave a comment »

தலைமறைவாகத் திரியும் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரையும், ஆயுதக் குழுவினரையும் ஒன்று திரட்டி நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் 50க்கும் அதிகமான நாடுகள் முயல்கின்றது என்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது

மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த சர்வதேச புலி ஆதரவு அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று நம்பகரமான தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் புலிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஷ்ரப்நகர் மக்களில் சிலரை வெளியேற்றுமாறு அம்பாறை அரச அதிபர் உத்தரவு

leave a comment »

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, 01 டிசெம்பர் 2010 எனும் திகதியிட்டு அரசாங்க அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 7:17 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது