Lankamuslim.org

Archive for திசெம்பர் 8th, 2010

மட்டகளப்பு மாவட்டத்தில் சோளம் அமோக விளைச்சல்

with one comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் சோளம் செய்கை அதிகளவில் விளைச்சலாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சோளம் செய்கை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய  பகுதிகளிலேயே அதிகமாக சோளம் செய்கை பண்ணப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 5:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஷ்கர் வித்தியாலய மைதான அபகரிப்பு: தடை உத்தரவு கோரி வழக்கு

with one comment

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் வாழைச்சேனை அஷ்கர் வித்தியாலயத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானக் காணியினை வாழைச்சேனை புத்த ஜெயந்தி பௌத்த விகாரைக்கு சொந்தமெனக்கூறி இன்று (7.12.2010) காலை முதல் வேலி போட்டு அடைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர்

பௌத்த விகாரைக்கு சொந்தமெனக்கூறி வேலி போட்டு அடைப்பதை தடைசெய்வதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 3:40 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விக்கிலீக்ஸ் இரகசிய கசிவா தனிப்பட்ட ‘private’ தகவல்களின் கசிவா ?

leave a comment »

‘இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தளங்களை அமைப்பதற்கான உதவி நிலையமொன்றை கொழும்பில் எற்படுத்துவதற்கு லக்ஸர் இ-தொய்பா இயக்கம் முயற்சித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது’ என்று ஊடகங்களில் பெரும்பாலும் இந்த தகவலை ஒத்த செய்திகள் பதிவு செய்யபட்டன, இதற்கு மேலாக சென்ற பல புலிகளின் ஆதரவு தமிழ் இணையதளங்கள் இலங்கையில் லக்ஸர் இ-தொய்பா முகாம் அமைத்துள்ளது, இலங்கையில் அவர்களுக்கு பயிற்சி வளங்கபடுகின்றது என்று வேறு சில தகவல்களையும் தமது பொய்களையும் கலந்து கூறியது.

இந்த லக்ஸர் இ-தொய்பா என்ற இயக்கம் கொழும்பில் உதவி நிலையமொன்றை எற்படுத்துவதற்கு முயற்சித்ததாக’ தெரிவிதுள்ளதான செய்தியை ஏற்கனவே இந்திய இராணுவ அதிகாரிகளை ஆதாரம் காட்டி அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் விரிவாக பார்க்க விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 1:23 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொடர் மழையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138 037ஆக அதிகரிப்பு!

leave a comment »

நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் 26 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 138 037ஆயிரத்து பேர் பாதிக்கபட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.இதுவரை 3 மரண  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதிகளவு வெள்ளப் பாதிப்பிற்குட்பட்ட மாவட்டமான மன்னாரில் 33 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, கம்பஹா, அம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 59 குடும்பங்களைச் சேர்ந்த 7784 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.310 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 683 வீடுகள் சேதமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 10:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது