Lankamuslim.org

Archive for திசெம்பர் 17th, 2010

துப்பாக்கி வைதிருந்தவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை

leave a comment »

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி வைத்திருந்ததாக குற்றம்சாட்ட பட்ட ஒருவருக்கு கல்முனை மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை விதித்துள்ளது. கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் கடந்த வியாழக்கிழமை இந்தத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்

சுலைமான் முகம்மத யூசுப் றியாஸ் என்பவர் மீது அனுமதிப்பத்திரமின்றி 2006.6.24 ஆம் திகதி T56 ரக தன்னியக்கத்துப்பாக்கி ஒன்றைத் தன் உடைமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 3:51 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தோண்டி எடுக்கப்பட்ட ஜனாஸா மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது !!

leave a comment »

கடந்த புதன்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட அப்துல் மனாப் நிஜாமியாவின் மரணம் தற்கொலை என மட்டக்களப்பு சட்ட வைத்திய நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்ததனை தொடர்ந்து ஜனாஸா மீண்டும் பழைய இடத்தில் அன்றைய தினமே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது இரண்டு மாதங்களுக்கு முன் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டு கடந்த புதன்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது .

21 வயதான திருமணமாகி 14 மாதங்கள் கடந்த நிஜாமியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் கணவரின் தந்தை கல்முனை பொலிஸாருக்கு செய்திருந்த முறைப்பாட்டின் பிரகாரம் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் எம்.எம்.றிஸ்வியின் உத்தரவின் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 3:17 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பம்

leave a comment »

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

இதன் பிரகாரம், முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும் மிகவும் குறைந்த செலவில் சில மணித்தியாலத்தில் இந்தியாவை அடைய முடியும் என்பது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்களவர்கள் எவருடனும் சண்டையிடவில்லை. மத வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் இல்லை

leave a comment »

எல்லாவல மேத்தானந்த தேரர்:

வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம், தமிழ்த் தேசி யம் என்று எவரும் உரிமை கொண்டாடமுடியாது. அதற் கான ஆதாரங்களும் இல்லை; வடமுனை முதல் தென்கரை வரை ஆட்சி புரிந்தவர்கள் சிங்களவர்கள் தான் என்று அடித்துக் கூறுகின்றார் எல்லாவல மேத்தானந்த தேரர். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஐக்கியத்துடன் இணைந்து வாழ்வோம்.

ஆனால் எந்தப் பிரதேசத்தையும் ஆளும் ஆட்சி அதி காரம் தமிழர்களுக்குக் கிடையாது. முழு நாட்டையும் ஆண்ட வர்கள் சிங்கவளர்கள் தான். அதற்கான ஆதாரங்களும், சரித்திரச் சான்றுகளும் நிறையவே உண்டு விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 11:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய கீதத்தை தமிழில் பாடலாம்: கெஹெலிய

leave a comment »

நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தை அவரவர் தங்கள் மொழிகளில் பாடலாம். தமிழ் மக்கள் தமிழில் பாடலாம்; சிங்கள மக்கள் சிங்கள மொழியில் பாடலாம். அதாவது, அரசியலமைப்பில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதன்படி பாடலாம். அதனை மாற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளமையானது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். அதாவது இந்த விடயத்தை அவர் புரிந்துகொண்ட அடிப்படையிலாகும் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 at 9:35 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது