Lankamuslim.org

Archive for திசெம்பர் 7th, 2010

ரிஸானா நபீக் வீடு திரும்புகிறார் ?

with one comment

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கான மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை மரணமான குழந்தையின் பெற்றோர் ரிஸானாவை மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையை தொடர்ந்து சவூதி அரேபிய மன்னர் மரண தண்டனையை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது

அதேவளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸான நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுதி அரேபிய மன்னர் தீர்ப்பினை இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 5:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் காணியை பௌத்த விகாரைக்காக அத்துமீறி பிடிப்பதற்கு முயற்சி – ஜவாஹீர் சாலி

leave a comment »

அபூறப்தான்: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் வாழைச்சேனை அஷ்கர் வித்தியாலயத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானக்  காணியினை வாழைச்சேனை புத்த ஜெயந்தி பௌத்த விகாரைக்கு சொந்தமெனக்கூறி இன்று (7.12.2010) காலை முதல் வேலி போட்டு அடைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருப்பது

குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் தான் உடினடியாக கொண்டு வரப்போவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹீர் சாலி காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 2:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ் குழு மீதான குற்றச்சாட்டுக்கு திட்டவட்ட மறுப்பு

leave a comment »

இந்த வருடத்திற்கான ஹஜ் பயணத்தின்போது ஹஜ் குழு உறுப்பினர்கள் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தேசிய ஹஜ் குழு திட்டவட்டமாக மறுக்கின்றது. இதற்கு முந்திய ஆண்டுகளில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா கட்டணமாக செலுத்தியே ஹஜ் பயணத்தை ஹஜ்ஜா ஜிகள் மேற்கொண்டு வந்தனர். வழமையாக நான்கு ஆயிரத்திற்கும் ஐந்து ஆயிரத்திற்கும் இடைப்பட்ட வர்களே ஹஜ் பயணம் செய்துவந்தார்கள். ஆனால் இம்முறை 5,800 இற்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் செய்தி ருக்கின்றார்கள். குறிப்பாக 6,336 பேர் ஹஜ்ஜுக்கு பயணம் செய்துள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இம்முறை ஹஜ் கட்டணம் இயலுமானவரை குறைக்கப்பட்டதேயாகும். இத்தொகை சுமார் 3, இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வாகும். இது ஹஜ்ஜாஜிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகுமென ஹஜ் குழு உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 12:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுபியான் மெளலவி குழு கிளிநொச்சி மாவட்ட அதிபருடன் சந்திப்பு

leave a comment »

கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மெளலவி தலைமையிலான குழுவொன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

இச் சந்திப்பு நேற்று பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. நாச்சிக்குடா, வட்டக்கச்சி, கிளிநொச்சி நகர், சேவிஸ் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளும் இக்குழுவில் அங்கம் வகித்தனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 9:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது