Lankamuslim.org

Archive for திசெம்பர் 11th, 2010

நோபல் பரிசு வழங்கும் விழாவில் இலங்கையும் கலந்து கொள்ளவில்லை

leave a comment »

2010ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஓஸ்லோ நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது இதில் நோபல் பரிசுக்கு பல சீனா விரோத நபர்கள் என்று சீனா கருதும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது. நோபல் பரிசு கமிட்டிக்கு எதிராக தீவிரமான பிரசாரமும் செய்தது.

இந்த நிலையில், நோபல் பரிசு வழங்கும் விழா ஓஸ்லோ நகரில் 10.12.2010 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ளுமாறு 65 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது . சீனாவின் நெருங்கிய தொடர்புகள் காரணமாக இலங்கை, ரஷ்யா, கஜகஸ்தான், கொலம்பியா, ஈரான், ஈராக், வியட்னாம், அர்ஜென்டினா, கியூபா, எகிப்து, பாகிஸ்தான், உள்பட 20 நாடுகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நகர சபையின் அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

leave a comment »

புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.என்.எம்.நஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று கூடிய சபை அமர்வின் போது சபைத் தலைவரினால் வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டின் உத்தேச வருமானமாக 7 கோடி 69 இலட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாவாகவும் உத்தேச செலவீனமாக 7 கோடி 33 இலட்சத்து 16 ஆயிரத்து 445 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது  இவ்வரவு செலவுத் திட்டம் நகர சபையில்  நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார்: விடத்தல்தீவு முஸ்லிம்களின் வரலாறு

leave a comment »

எம்.எ.அப்துல் மஜீத்
விடத்தல்தீவு முஸ்லிம்களது வரலாற்றை நோக்குகின்ற போது, இலங்கை முஸ்லிம்களின் நீண்ட பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட குடியிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகத் தமது தனித்துவ அடையாளத்தைக் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

அராபிய முஸ்லிம்கள் வர்த்தகர்களாக மாந்தை துறைமுகத்துடன் மிக நீண்ட காலமாக தொடர்பு வைத்திருந்ததுடன், அங்கு குடியேறினர் என்பதை பின்வரும் வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. பெரிய பிரித்தானியாவினதும், அயர்லாந்தினதும், அரசு ஆகிய கழக நிலை அறிக்கையில் கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சம்பந்தமாக சேர் அலக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் நைட் வீ. பீ. ஆர். ஏ. எஸ் என்பவர் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் இலங்கையில் அரேபிய முஸ்லிம்களது பூர்வீக குடியிருப்புக்கள் பற்றி பின்வருமாறு எடுத்தியம்புகிறது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:15 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தப்பியோட முயற்சித்த சந்தேக நபர் இருவர் உயிரிழப்பு

leave a comment »

வரக்காபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு பொலிஸார் உயிரிழந்தது தொடர்பில் மீரிகம பிரிவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தப்பியோட முயற்சித்த போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவரும் உயிரழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீர்வை உலகுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை திசை திருப்பிவிட்டனர்

leave a comment »

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் தேர்தல் விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் பேசப்படும்

leave a comment »

பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான நூர்தீன் மசூர்  திடீரென வபாத்தான  சூழ்நிலையில் வன்னி மாவட்டத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக பேச்சுகள் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமையில் கொழும்பு வன்னி மாவட்ட முஸ்லிம்களுடன் நடைபெற்ற கட்சியின் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணையாளரை விரைவில் சந்திக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 1:10 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனையில் நிர்மானிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் விரைவில் கையளிக்கப்படும்

leave a comment »

கல்முனை பஸ் நிலையத்தில் USAID நிறுவனத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.

சுனாமியால் அழிவடைந்த வர்த்தக கடை தொகுதிகளை புதிதாக நிர்மாணிக்க 2007 ஆண்டு  கல்முனை மாநகர சபையின் முயற்சியாலும்  USAID நிதியுதவியாலும் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது

கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 19 கடைத்தொகுதிக்கும் 2008 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது. இக் கடைகளை மக்களுக்கு வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் நிலவியதால் கடைகளை வழங்குவதில் பல தாமதங்கள் ஏற்பட்டன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 1:09 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சாய்ந்தமருது பிரதேசதிற்கு நிதியொதுக்கீடு

leave a comment »

திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இவ்வாண்டிற்கான தனது வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகளுக்காக 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

 

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 1:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது