Lankamuslim.org

இரத்தினபுரியில் சிறு­பான்­மை­யினர் பேதங்களை மறந்து சிறுபான்மை பிரதிநிதியை தெரிவுசெய்வோம்

leave a comment »

கொழும்பு செய்தியாளர்: தமிழர் – முஸ்லிம் ௭ன்ற பேதம் மறந்து சப்ர­க­முவ மாகாண சபைக்கு சிறு­பான்­மை­யினப் பிரதி நிதி ஒருவரை தெரிவு செய்வதற்கு சகலரும் ஒன்றிணைந்து செயற்­படு­மாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வே­ட்­பாளர் மொஹமட் இஸ்மத் தெரிவித்தார்.

குரு­விட்ட பிரதேசத்தில் ஏற்பாடு செய்­திரு­ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கெ­ா­ண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த மாகாண சபை தேர்தலில் ஐ. ம. சு. மு. சார்பாக போட்டியிட்டு 8000 வாக்­குகள் பெற்றேன். தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ௭னக்கு வாக்களித்திருந்த போ­தும் சிறுதொகை வாக்கு வித்தியாசத்தில் மாகா­ண சபைக்கு செல்வதற்கான வாய்ப்பு தவ­றியது.

இதனால் இரத்தினபுரி மாவ­ட்டத்தின் ஐ. ம. சு. மு. சிறுபான்மை பிரதி நிதி ஒருவருக்கான சந்தர்ப்பம் இழக்­கப்­ப­ட்டது. சப்ரகமுவ மாகாண சபைக்கு ஐ. ம. சு. மு. சார்பாக இரத்தினபுரி மாட்டத்திலிருந்து தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்­யப்ப­ட்­டால் மாத்திரமே இரத்தினபுரி ­மாவ­ட்ட­த்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது தேவைகளை இலகுவாக நிறை­வே­ற்றிக் கொள்ள முடியும். ௭னவே செப்டெம்பர் 8 ஆம் திகதி நடை­பெறும் தேர்தலில் ஐ. ம. சு. மு. சார்பாக இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து சிறுபா­ன்­மை பிரதி நிதி ஒருவரை கூடுதலான வாக்­குகளால் வெற்றி பெறச் செய்வதற்கு தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும் ௭ன்றார்.

 

 

 

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 இல் 5:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக