Lankamuslim.org

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்தத் தேர்தலோடு முடிந்துவிடாது: ஹக்கீம்

with 4 comments

F.M.பர்ஹான்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் போராட்டம் இந்த தேர்தலோடு முடிவடைந்து விடாது என்றும் கட்சியின் போக்கிலும் நோக்கிலும் மிகப் பெரிய சவால்களை எதிர் நோக்கியிருப்பதாகவும் கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கிண்ணியாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார் .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை தேர்தல் பிரசாரக்கூட்டம் கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் ஞாயிற்றுக்கிழமை (26) மாலை நடைபெற்றது.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,

முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவது பொதுவாக நாடு முழுவவதிலும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அபிமானிகள் மத்தியில் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது முஸ்லிம்களின் உண்மையான நாடித்துடிப்பின் ஆழ, அகலம் எங்களுக்கு நன்கு புரிகின்றது.

இதே ஆர்வம் தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் வெற்றி பெறும் எமது உறுப்பினர்கள் விலை போகும் அபாயம் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகின்றேன். அவர்களது கால்களை கட்டிப்போட்டு கடிவாளம் போடும் காரியத்தில் எமது கட்சித் தொண்டர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

அவர்கள் வெற்றி பெற்ற மறுகணமே எங்காவது கூட்டிக்கொண்டு சென்று விடுங்கள் என்றும் அல்லது புனித மக்காவிற்கு உம்ரா கடமைக்கு அழைத்துச்சென்று விடுங்கள் என்றும் கட்சியின் அபிமானிகள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தவண்ணமுள்ளனர்.

அரசாங்கத்தில் உள்ள வயது முதிர்ந்த பிரதி அமைச்சர் ஒருவரும், அரசியல் முதிர்ச்சியற்ற சில்லரைப் பிரதியமைச்சர் ஒருவரும் தான் காழிப்புணர்ச்சியின் காரணமாக என்னைப் பற்றி காட்டமான விமார்சனங்களை தற்பொழுது செய்து வருகின்றனர். அதைப்பற்றி நான் அலட்டிக் கொள்ளப்போவதில்லை.

நாளுக்குநாள் களநிலவரங்கள் எங்களுக்குச் சாதகமாக மாறிவருகின்றன. சாரி சாரியாக மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் அணி திரள்கின்றனர். ஆபத்திலிருந்து கட்சியைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் முன்வந்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 27, 2012 இல் 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. தேர்தல் வந்தாதானே போராட்டமே ஆரம்பம் பின்னர் எங்கே அதட்கு முடிவு இற்றைக்கு எட்டு வருடங்கள் முன்னர் நடந்த உங்க போராட்டத்தின் இலட்சனம் நேற்று முன்னால் தீவிரவாத ஆயுத போராளி பஷீர் அவர்களால் காத்தான்குடியின் சந்த்தியில் பகிறங்கமாகவே சொல்லபட்டதே அவர் முன் வந்து நடத்திய மு.போராளிகளின் ரவுடித்தன அட்டகாசங்களை???

    PMAMF Mohammed H.I.R.A.Z

    ஓகஸ்ட் 28, 2012 at 1:33 முப

  2. ‘எமது உறுப்பினர்கள் விலை போகும் அபாயம் பற்றி தொடர்ந்து எச்சரித்து வருகின்றேன். அவர்களது கால்களை கட்டிப்போட்டு கடிவாளம் போடும் காரியத்தில் எமது கட்சித் தொண்டர்களும் ஒத்துழைக்க வேண்டும்.
    அவர்கள் வெற்றி பெற்ற மறுகணமே எங்காவது கூட்டிக்கொண்டு சென்று விடுங்கள் என்றும் அல்லது புனித மக்காவிற்கு உம்ரா கடமைக்கு அழைத்துச்சென்று விடுங்கள் என்றும் கட்சியின் அபிமானிகள் என்னிடம் வேண்டுகோள் விடுத்தவண்ணமுள்ளனர்.’
    தலைவர்! இது என்ன கேவலம்? இதைவிடவும் ஒரு கேடு கெட்ட அரசியல் கடைநிலை இருக்கமுடியுமா? இதுதானா உங்கள் ஆளுமை? தயவு செய்து ‘அஸ்ரப்பின் பாசறையில் வளர்ந்தேன்’ என்று அவரை அவமானப்படுத்தாதீர்கள். அவர்கட்சிக்குள் ஒரு சிங்கம். நீங்களே… ‘அப்பன் எப்போ சாவன் திண்ணை எப்போ காலியாகும்’ எனக்காத்திருந்து நுழைந்த பிளாஸ்டிக் சிங்கம். அவ்வப்போது உங்கள் முதுகெலும்பை தொட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள். அதை உறுதிப்படுத்திக்கொண்டு அடுத்தவர்களது எலும்பு பற்றிக் கவலைப்படுங்கள்.
    எமது உறுப்பினர்கள் விலைபோகிறார்கள் என்று பகிரங்கமாகப் பேசுகிறீர்களே! இத தானா உங்கள் கட்சியினரின் விசுவாசம்? ஏன் உங்கள் கட்சியினரை உங்கள் ஆளுமைக்குள் கொண்டுவர முடியாதா?
    இது எப்படி இருக்கிறதென்றால்…தகப்பன் சுருட்டுப்புகைப்பவனாக இருந்து கொண்டு ‘ஐயோ எனது பிள்ளைகள் சுருட்டுக் புகைக்க வேண்டாம் என் கூறினால் கேட்க மாட்டேனென்கிறார்களே!!’ என்று புலம்புவதைப்போல இருக்கிறது.
    இதற்கும் மருந்திருக்கிறது. எதற்கும் இன்றிலிருந்தாவது நீங்கள் முன்னுதாரணமாக கட்சிவிசுவாசத்துடன் நடந்து காட்ட முயற்சியுங்கள்.

    roshaen

    ஓகஸ்ட் 28, 2012 at 6:13 முப

  3. இவர் தானா அமைசரவை கூட்டதில் எலி போல் பதுன்குபவர்? மக்களிடம் வந்து சின்கம் போல் கர்சசிக்கிரார் ஆனால் அமைசர் கூட்டதில் ஜனாதிபதியை பார்ததும் எலி போல் பதுன்குகிரார். ஜனாதிபதியே இதை கூறிய பின்னும் சூடு சொரானை உள்ள் எவனும் இன்னும் மக்களை பேய் காட்டி கொன்டு அமைசரவையில் இருப்பான்காளா?

    pasha

    ஓகஸ்ட் 28, 2012 at 9:49 முப

  4. கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் சில்லறையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும் தனித்துவம், போராட்டம் ஆகியவற்றை இனாமாகப் பெற்றுக் கொள்ள அப்பாவி வாடிக்கையாளர்களான வாக்காளப் பெருமக்கள் முந்தியடித்துக் கொண்டு ஓடுவது இப்பொழுதெல்லாம் ஆகா… கண்கொள்ளாக் காட்சி தான் !! அன்பின் காங்கிரஸ் சகோதரர்களே !! உங்களது தலைவர்களால் இதுவரை முஸ்லிம்களுக்காக அவர்களது என்ன என்ன உரிமைகளை பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கின்றன….அல்லது முஸ்லிம்கள் இழந்து நிற்கும் உரிமைகள் என்ன என்பது பற்றியாவது பட்டியல் போட்டு இதோ பாருங்கள் முஸ்லிம்கள் இழந்து நிற்கும் உரிமைகள் எனக் கூற முடியுமா ? இவற்றுக்காகத் தான் நாம் போராடுகின்றோம் என்று கூறினால் அதில் நியாயம் உண்டு….இலலை அந்த உரிமைகள் குறித்த வரைவிலக்கணங்கள் காங்கிரசுக்கு மட்டும் தான் புரியும் ஏனையவர்களுக்குப் புரியாது என.றால் அதனையும் சொல்லுங்கள்..!!!
    கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சில தமிழ் மக்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை தீர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவற்றை முழு இலங்கை முஸ்லிம்களதும் பிரச்சினையாக காட்ட எத்தனிக்கும் காங்கிரஸின் கபடத்தனத்தை இந்த தேர்தலில் காணலாம். அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதனை விமர்சிக்கும் ஒருவரால் இந்த மக்களுக்கு என்ன பயன்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை இந்த மக்கள் சிந்திக்கவே மாட்டார்களா ? காங்கிரசை நம்பிய நிலையில் இன்று அரசு இல்லை என்பது சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயமாகும்…..கிழக்கு மாகாண சபைத் தேர்தலுடன் காங்கிரஸின் சகல சவாடல்களும் வேஷங்களும் முடிவுக்கு வந்து விடும்…. பாவம் இந்த அப்பாவி வாக்காளர் பெருந்தகைகள் !!!!!!!

    Ossan Salam - Doha

    ஓகஸ்ட் 28, 2012 at 12:07 பிப


பின்னூட்டமொன்றை இடுக