Lankamuslim.org

மஸ்ஜிதுக்குள் நுழைந்து தாக்கியவர்கள் கைது, பொலிஸ் பாதுகாப்புடன் ஜும்ஆ

with one comment

இணைப்பு-2 M.ரிஸ்னி முஹம்மட்:  கொழும்பு வெல்லம்பிட்டி கோஹிலவத்தையில்  63/17 இல் மஸ்ஜித்தில்  பொலிஸ் பாதுகாப்புடன் ஜும்ஆ தொழுகை இடம்பெற்றது.  அதேவேளை முஅத்தின் மீது தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி ,மஸ்ஜிதுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக  குறித்த மஸ்ஜிதின் பொருளாளர்  ஸாfபர் ஹாஜியார் lankamuslim.org க்கு தெரிவித்த தகவலில் நேற்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கான அதான் சொல்லப்படும் போது மஸ்ஜிதுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் முஅத்தின் மீது தாக்குதல் நடத்தி அவரை காயப்படுதினர்  இது தொடர்பாக நாம் பொலிசாரிடம் முறையிட்டோம். தற்போது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு பின்னால் வேறு பலமான சக்திகள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை  ஜூம்ஆ தொழுகை பொலிஸ் பாதுகாப்புடன் இடம்பெற்றது. இந்த விடயத்தை கையாள்வதில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் ஆலோசனைபெற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பான சந்திப்பு ஒன்று இன்று மாலை பொலிஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது என்று தெரிவித்தார் .

இதற்கு முன்னர் இந்த மஸ்ஜிதுக்கு தொழுகைக்காக வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்களும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.

அதேவளை தாக்குதல் நடத்தியவர்கள் பிரதேசத்தில் வேறு சில சிங்கள வாலிபர்களின் முச்சக்கர வண்டிகளையும் தாக்கி சேதப் படுத்தியுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மஸ்ஜிதை தாக்க வருமாறு  முச்சக்கர வண்டி சாரதிகளை அழைத்தபோது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த போதே  குறித்த சந்தேக நபர்கள் மேற்படி முச்சக்கர வண்டிகளையும் தாக்கி சேதப் படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக குறித்த சிங்கள வாலிபர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்  கோஹிலவத்தையில்  மஸ்ஜித்தில் பொருளாளர் ஸாfபார் ஹாஜியார் எமக்கு தெரிவித்தார் .

தாக்குதல் நடத்தியவர்கள்   மீது பொலிசார் வழக்கு பதிவு செய்வார்களா  அல்லது சம்பந்தப்பட்ட தரப்புடன்  உடன்பாட்டுக்கு வந்த பின்னர் இவர்கள் விடுதலை செய்யப் படுவார்களா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இணைப்பு-2 

M.ரிஸ்னி முஹம்மட்: வெல்லம்பிட்டி கோஹிலவத்தை மஸ்ஜித் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள இருவரையும் அவர்கள் எதிர்வரும் காலங்களில் மஸ்ஜிதுக்கு இடையூறாக செயல்படமாட்டார்கள் என்ற எழுத்துமூல உறுதிமொழியை பெற்று அவர்களை விடுதலை செய்ய மஸ்ஜித் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எமக்கு தகவல் தெரிவித்த  கோஹிலவத்தை ஜூம்ஆ மஸ்ஜித்தின் பொருளாளர்  ஸாfபர்  இன்று மாலை  வெல்லம்பிட்டி போலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரையும் அவர்கள் எதிர்வரும் காலங்களில் மஸ்ஜிதுக்கு இடையூறாக செயல்படமாட்டார்கள் என்ற எழுத்துமூல உறுதி மொழியை வெல்லம்பிட்டி OIC முன்னிலையில் பெற்று அவர்களை விடுதலை செய்ய மஸ்ஜித் நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவித்த தகவலில், இந்த சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகள். பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதியான கொல்லப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் அதன் சட்டத்தரணி ஆகியோரும் கலந்துகொண்டனர் . இந்த பிரச்சினையை கையாள்வதில் சுமனா பிரேமச்சந்திர முக்கிய பங்களிப்பை வழங்கினார். என்றும் தெரிவித்தார் .

மேலும் அவர் தெரிவித்த தகவலில், அங்கு உரையாற்றிய OIC  குறித்த இருவரின் மீதும் வழக்கு தாக்கல் செய்யப் பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படவேண்டும் என்று தெரிவித்தார் .மேலும் அவர் குறித்த இருவரும் எதிர்காலத்தில் எந்த குற்றத்திலும் ஈடுபடக் கூடாது என்றும் அவர்கள் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டால் மஸ்ஜித் தாக்குதல் குற்றசாட்டு  புதிய குற்றச் சாட்டுடன் இணைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப் படும் என்று அவர்களை கடுமையாக எச்சரித்தார் என்றும் .

இந்த கலந்துரையாடலில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர மஸ்ஜித் நிர்வாகம் கோருவது போன்று எதிர்வரும் திங்களை கிழமை எழுத்து மூல உடன்பாட்டை OIC முன்னிலையில் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை குறித்த தாக்குதல் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் . இவர்கள் பிரதேசத்தின் சிங்களவர்கள் சிலரின் முச்சக்கர வண்டிகளை சேதப்படுத்திய குற்றச் சாட்டில் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. என்றும் மஸ்ஜிதின் பொருளாளர்  ஸாfபர் ஹாஜியார் குறிப்பிட்டார்.

இது தொடர்பான எமது முந்திய செய்தி:

ஜும்ஆ மஸ்ஜித் ஒன்றின் மீது தாக்குதல் சந்தேக நபர் ஒருவரின் தந்தை கைது

Written by lankamuslim

ஓகஸ்ட் 31, 2012 இல் 2:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. வரவேற்கப்பட வேண்டியதே! பொலிஸாருக்கும் அரசுக்கும் ஒரு சபாஷ்!! சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பை நிறைவேற்றுவது மக்களுக்கு பயமின்மையை உருவாக்கும்.

    பிற மதத்தவர்களின் உரிமை மதிக்கப்படுவதே ஒருவன் தன் மதத்தை சரியாகக் கடைப்பிடிக்கின்றான் என்பதை வெளிப்படையாகக் காட்டுவது.

    ஆனால், தம்புள்ள விடயத்தில் பள்ளி தகர்ப்பு வேலைகளில் ஈடுபட்டோர் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படாதது கவலை தருவது. வாழும் உரிமையை சந்தேகத்துக்கு உட்படுத்துவது.

    பகிரங்கமாக நடைபெற்ற இவ்வத்துமீறலை. நீதித்துறை காணாதிருப்பது எதையூம் யாரும் செய்யலாம் என்ற மனப்போக்குக்கு எண்ணெய் ஊற்றுவதைப் போன்றதே!

    போலிஸாரால் பதிவூ செய்யப்படும் வழக்குகளை மட்டும்தான் நீதித்துறை அணுகும் என்ற மனநிலை தவிர்க்கப்படாவிடில், எங்கோ ஓரிடத்தில் நீதி தவறிழைத்துக் கொண்டிருக்கிறது என்பதும், அதனால் நாழு அழிவூப் பாதையில் செல்வதற்கு அணுமதிக்கிறது என்பதும் வெளிபபடையாகிறது.

    இலங்கையின் யாப்பைக் காப்பாற்ற வேண்டிய கடமை நீதித்துறைக்கு உரியது. அது மீறப்படும் சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொண்டிருக்க முடியூம் என்றால், யாப்பு தாயில்லாப் பிள்ளை போன்று அநாதையாகி விடும் என்பதை உணராதிருப்பது நல்ல சமிக்ஞை அல்ல என்பதைக் கூறி வைக்க விரும்புகிறேன்.

    nizamhm1944

    செப்ரெம்பர் 2, 2012 at 8:50 முப


பின்னூட்டமொன்றை இடுக