Lankamuslim.org

மன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பம்

leave a comment »

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடற்போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்

இதன் பிரகாரம், முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும் மிகவும் குறைந்த செலவில் சில மணித்தியாலத்தில் இந்தியாவை அடைய முடியும் என்பது குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க

தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விமான போக்குவரத்து சேவை மாத்திரமே இடம்பெற்று வருகிறது. இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்பத்தில் கப்பல் சேவைகள் நடைபெற்ற போதும் யுத்தம் காரணமாகக் கடந்த 30 வருடங்களாக கப்பல் சேவை இடம்பெறவில்லை.

மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதனூடாக பெருமளவு மக்கள் நன்மையடைய உள்ளனர். விமானத்தில் பயணம் செய்வதைவிட குறைந்த செலவில் கப்பலில் பயணம் செய்ய வாய்ப்புக்கிட்ட உள்ளதோடு பயணிகளுக்கு புதிய பயண அனுபவமும் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Written by lankamuslim

திசெம்பர் 17, 2010 இல் 11:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக