Lankamuslim.org

ஐ.நா. குழுவை அனுமதிக்க முடியாது: அரசின் தீர்மானத்துக்கு : சம்பிக்க கண்டனம்

leave a comment »

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவை இலங்கைக்கு அனுமதிப்பதென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை ஜாதிக ஹெல உறுமயவின் அமைப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்வதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்கும் ஐ.நா. ஆலோசனைக்குழுவை அனுமதிப்பதென்பது அந்தக் குழுவுக்கு அங்கீகாரமளிப்பதாகவே அமைந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார் விரிவாக பார்க்க

எதிர்வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படவுள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு மேலும் உயிரளிப்பதாகவே அரசாங்கத்தின் இந்தச் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன எனவும் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரத்தில் அரசாங்கம் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Written by lankamuslim

திசெம்பர் 21, 2010 இல் 11:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக