Lankamuslim.org

பெளத்த கொடிக்கு கொடுக்கப்படும் அந்தஸ்து ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்கப்படும்:ஜனாதிபதி

with one comment

பெளத்த கொடிக்கு நாட்டில் கொடுக்கப்படும் அதே அந்தஸ்தையும் கெளரவத்தையும் ஏனைய மதங்களின் கொடிகளுக்கும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித்துள்ளார். நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான இந்துக்களின் நந்திக்கொடி, முஸ்லிம்களின்  பிறைக்கொடி, கத்தோலிக்கர்களின் புனித பாப்பரசருக்கான வெள்ளை – மஞ்சள் கொடி ஆகியவற்றிற்கும் பெளத்த கொடிக்கு கிடைத்திருக்கும் அதே மதிப்பையும் மரியாதையையும் வழங்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து சகல மதக் கொடிகளையும் ஜனரஞ்சனப்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்துள்ளார்.

இங்கு முஸ்லிம்களின் கொடி எது என்பது பற்றிய தீர்கமான பார்வை இல்லாத நிலையில்   பச்சை நிற  பிறைக்கொடி முஸ்லிம்களின் ,இஸ்லாத்தின் கொடி என்று கருதப்படுகின்றது முஸ்லிம்களின் கொடி பாகிஸ்தானின் தேசிய கொடியாகவோ அல்லது வேறு ஒரு முஸ்லிம் நாட்டின் தேசிய கொடியாகவோ இருக்கமுடியாது முஸ்லிம்களின் கொடியென்றால் அது நிச்சயமாக இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்  படுத்தவேண்டும்  விரிவாக பார்க்க

என்பது அவசியமானது இலங்கையில் பெளத்த கொடி முழுமையாக பெளத்த மதத்தையும் ,  நந்திக்கொடி இந்துக்களையும் , பாப்பரசருக்கான வெள்ளை – மஞ்சள் கொடி முழுமையாக கத்தோலிக்கத்தையும் பிரதிபலிகின்றது என்ற நிலையில் பச்சை நிற  பிறைக்கொடி அல்லது வெறும் பச்சை கொடி எந்தளவுக்கு இஸ்லாத்தை பிரதிபலிகின்றது என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது

Written by lankamuslim

திசெம்பர் 27, 2010 இல் 9:22 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. முதலில் நாட்டு மக்களுக்கு அந்தஸ்தையும் கெளரவத்தையும் கொடுக்கட்டும்……

    mohamed azath

    ஜனவரி 2, 2011 at 2:37 பிப


பின்னூட்டமொன்றை இடுக