Lankamuslim.org

மட்டக்களப்பில் 60 ஆயிரம் ஏக்கர் பயிர் நாசம்

leave a comment »

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வேளான்மைச் செய்கை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே நெற் பயிர்கள் குடலைப் பருவத்தில் அறக்கொட்டியான் நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ள. இவ்வேளையில் மழை வெள்ளம் காரணமாக அதற்கான கிருமிநாசினியைக் கூட விசிற முடியாத நிலையில் விவசாயிகள் பலரும் தற்போது கவலை கொண்டவர்களாகவே காணப்படுகின்றார்கள் விரிவாக பார்க்க

விவசாயிகளில் ஒரு சிலரே தமது பயிர்ச் செய்கைகளுக்காக காப்புறுதி செய்துள்ள நிலையில் பாதிப்பிற்குள்ளான அனைத்து விவசாயிகளுக்கும் விசேட திட்டமொன்றின் மூலமாவது அரசாங்கம் நிவாரணம் வழங்க முன் வர வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் அமைப்பின் செயலாளர் கந்தப்பன் திருநாவுக்கரசு கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கரில் பெரும் போக வேளாண்மை செய்கை பண்ணப்டப்டுள்ளதாகக் கூறும் கமநல சேவைகள் உதவி ஆiணாயாளர் ஆர்.ருசாந்தன்இ மழை வெள்ளம் காரணமாக பாதிப்பிற்குள்ளான சுமார் 60 ஆயிரம் ஏக்கரில் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றார்.

விவசாயிகள் தங்களால் அறிவிக்கப்பட்ட கால அட்டவனையை மீறி முன் கூட்டியே விதைப்பு வேலைகளை ஆரம்பித்ததும் இந்த பாதிப்பிற்குரிய காரணங்களில் ஒன்று என அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு மற்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து இதுவரை அறிவிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றார். இவை தொடர்பான விபரங்கள் கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்டப்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.-BBC

Written by lankamuslim

திசெம்பர் 30, 2010 இல் 12:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக