Lankamuslim.org

யாழ் மாநகரசபையின் துணை மேயர் பதவி இன்னும் கிடைக்கவில்லை !

leave a comment »

யாழ் மாநகரசபையின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வும், ஒளிவிழாவும் கடந்த திங்கட்கிழமை-27-12-2010-பிற்பகல் நடைபெற்றுள்ளது .

மாநகர சபை மேயர் யோ.பற்குணராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெயனரல் ஜி.ஏ.சந்திரசிறி, முஸ்லிம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்கள் சர்வமத தலைவர்கள், மாநகர ஆணையாளர் சரவணபவ, மாநகரசபை எதிர்கட்சித் தலைவர் றெமிடியஸ் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்துள்ளனர் விரிவாக

யாழ் மாநகர சபையின் பதவிக் காலம் ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளன நிலையில், பிரதி மேயர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஆர்.எம்.ரமீஸ் அல்லது மௌலவி பி .ஏ.எஸ் .சுபியான் என்பவருக்கு வழக்கப்படும் என்று யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் இருந்தபோதும் அது தொடர்பான எந்தவொரு விடயமும் குறித்த அந்த நிகழ்வில் இடம்பெறவில்லை என்று எது யாழ் செய்தியாளர்கள் தெரிவித்தனர் ஆவர் மேலும் தெரிவிக்கையில் துணை மேயராக இதில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த  ஒருவரை நியமிப்பதில் சில சட்ட சிக்கல்கள் தோன்றியுள்ளதாக தெரிவித்தார்

யாழ் மாநகர சபையில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் இதில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். எனவே பிரதி மேயர் பதவியை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இவ்வுடன்படிக்கையின்படி கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் இப்பிரதி மேயர் பதவியை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் யாழ். மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்குவார் என்கிற இணக்கப்பாட்டுக்கு காணப்பட்டது என்பது குறிபிடத்தக்கது

Written by lankamuslim

திசெம்பர் 31, 2010 இல் 3:48 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக