Lankamuslim.org

Archive for திசெம்பர் 2010

கம்பளையை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

leave a comment »

கம்பளை நகரை சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கம்பளை நகர பிதா சரத் காமினி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

கம்பளை நகரின் அபிவிருத்திக்கு பிரதமர் டி.எம்.ஜயரட்ண வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தி வருகின்றார். கம்பளை நகரின் அபிவிருத்திக்கு சீன அரசாங்கம் பெருமளவு உதவியளிக்கவுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 5:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் அனைத்து உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும்

leave a comment »

மனித உரிமை மீறல்கள் பற்றிப் பேசுபவர்கள் எமது இனத்திற்குள்ளும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் பேசவேண்டும். வெறுமனே ஒரு தரப்பால் மட்டும் மீறப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பேசுபவர்கள் உண்மையான மனித உரிமை வாதிகளாகவோ அல்லது ஜனநாயகவாதிகளாகவோ இருக்க முடியாது

என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். டிசம்பர் 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டு வவுனியா முத்தையா மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மனித உரிமைகள் இல்லத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 5:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொத்துவில் முஸ்லிம் தனியார், மற்றும் அரச காணிகளுக்கு அச்சுறுத்தல்

with one comment

பொத்துவில் 3 ஆம் பிரிவு சாய்வுத்தம்பி தோட்டப் பகுதியிலுள்ள புதைபொருள் ஆராய்ச்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடத்திற்கும் அதைச் சுற்றியுள்ள பகுதிக்கும் பௌத்த தேரர் ஒருவரினாலும் படையினராலும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக பொத்துவில் பிரதேசசபை உதவித் தவிசாளர் ஏ.எம்.எம்.தாஜுதீன் தெரிவித்துள்ளார் என்று பொத்துவில் தகவல்கள் தெரிவிக்கின்றன

இதனால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு எல்லை வேலி அமைக்கப்பட்டு பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். என்றும் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிம் வெளியாகியுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 5:06 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் பாவனைக்குகந்ததல்ல

leave a comment »

மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரில் 90 வீதமானவை பாவனைக்குகந்ததல்லவென மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.மாத்தளை மாவட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீரை பரிசோதனைக்குட்படுத்தியபோதே இது கண்டறியப்பட்டது.

இந்த நீரை தொடர்ந்து பயன்படுத்தினால் மக்கள் நோய் வாய்ப்பட வேண்டிய நிலையேற்படும் என்றும் இந்த நீரை முறையாகச் சுத்திகரித்து அல்லது குளோரின் கலந்து மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 1:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ்ப்பாணம் நோக்கி ஒரு பயணம்

leave a comment »

புலிபயங்கரவாதிகளினால் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட நிலையில் புத்தளத்தில் வாழந்து வந்த யாழ் முஸ்லிம் மக்களின் ஒரு சிறு தொகுதியினர், மீண்டும் யாழ்பாணம் சென்று வாழ்வியல் சாத்திய கூறுகளை கண்டறியும் முகமாக இன்று காலை புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணமாகினர்.

Sri Lankan Way என்ற அமைப்பினால் இதற்கான சுற்றுல்லா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் இம்மக்கள் இரண்டு பஸ்களில் புறப்பட்டு குடா நாட்டுக்கான தங்களது பயணத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் முதற்கட்டமாக 150 குடும்பங்களின் தலைவர்கள்  பயணிக்கின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 10:38 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாவட்ட மட்டத்தில் 20 ஆங்கில ஆசிரியர் பயிற்சி நிலையங்கள்

leave a comment »

அரசாங்கப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் மாவட்ட அடிப்படையில் 20 ஆங்கில ஆசிரியபயிற்சிநிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன என கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.குணசேகர தெரிவித்துள்ளார் .

இப்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் கற்பித்தல் வளவாளர்களையும் இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் இதற்கான உடன்படிக்கையில் கல்வி அமைச்சும் இந்திய அரசும் கைச்சாத்திட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 14, 2010 at 9:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

65 காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகள்

leave a comment »

நாட்டின் சகல காதி நீதவான் நீதிமன்றப் பிரிவுகளுக்கும் தனித்தனியான முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரிகளை நியமிக்க நீதியமைச்சர் ரவூப் ஹகீம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது

தற்போது இலங்கையில் உள்ள 65 காதி நீதிமன்றப் பிரிவுகளுக்கும்  முஸ்லிம் தீடீர் மரணவிசாரணை அதிகாரி கள்  நியமிக்கபடவுள்ளனர் என்பதுடன் முஸ்லிம் பெண் சமாதன நீதவான்களை  நியமிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறியமுடிகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 13, 2010 at 9:37 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இலங்கையில் ஈரானின் பாரிய நாசகாரிக் கப்பல்

leave a comment »

ஈரானிய கடற்படையின் உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் அந்நாட்டின் பாரிய நாசகாரிக் கப்பல் ஒன்றுடன் இலங்கை வந்துள்ளனர். இலங்கை வந்துள்ள உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக் கடற்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் தெரிவிக்கப்பட்டுகின்றது .

புதிய கடல்  பாதுகாப்பு சவால்கள் மற்றும்  பாதுகாப்புத் தொடர்பில் இவர்கள் ஆராயந்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது . இதேவேளை,இலங்கைக் கடற்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் 26 நாடுகளின்  கடற்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு கப்பல்களுடன் வருகை தந்த வண்ணமுள்ளனர்.

Written by lankamuslim

திசெம்பர் 13, 2010 at 1:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளத்தில் பெளத்த பிக்கு கைது

leave a comment »

மதுபானம் அருந்தி விட்டு போதையில் சிறுவன் ஒருவரை தாக்கியமைக்காக பெளத்த பிக்கு ஒருவர் புத்தளத்தில்   நேற்று மாலை கைது செய்யப்பட்டார். இவர் புத்தளம்  தப்போவ பிரதேச   ஸ்ரீ வித்யாராம விகாரையை சேர்ந்தவர். இதன்   தலைமை விகாராதிபதி வழங்கிய முறைப்பாட்டின் பேரில் இக்கைது இடம்பெற்றுள்ளது. இவர் இன்று புத்தளம் பொலிஸ் நிலைய பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜராக்கப்படுகின்றார்.

Written by lankamuslim

திசெம்பர் 13, 2010 at 10:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய கீதம் : இறுதித் தீர்மானம் நிறைவேற்றப்பட வில்லை

leave a comment »

இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே இசைக்க வேண்டுமென அமைச்சரவையில் எவ்வித இறுதித் தீர்மானமும் நிறைவேற்றப்பட வில்லையென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தேசியக் கீதத்தைப் பாடவேண்டிய விதிமுறைகள் பற்றிய அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த போது, தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் இசைக்க வேண்டும் என்கின்ற முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டதாகவும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தேவானந்தா கூறினார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 13, 2010 at 9:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுவது நகைச்சுவையாம்

leave a comment »

தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படுவது நகைச்சுவையா விடயம் என வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இதுசம்பந்தமாக பேசப்படும் போது  விமல்  ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல மொழிகள் பேசப்படுகிற இந்தியாவிலே ஒருமொழியில் தான் தேசிய கீதம் பாடப்படுகிறது, அதுபோல வெளிநாடுகளிலும் ஒரு மொழியில் தான் பாடப்படுகிறது என தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 13, 2010 at 9:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏறாவூர் வாகன விபத்தில் ஒருவர் வபாத்

மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த வியாபாரி பர்ஹான் இமாத் -வயது 24 என்ற வாலிபர் வபாத்தாகியுள்ளார், இவர் ஏறாவூரில் தனது மனைவியின் வீட்டிலிருந்து ஓட்டமாவடிக்கு சென்று கொண்டிருந்த வேளை சந்திவெளியில் விபத்தில் சிக்கியுள்ளார் என்று தெரியவருகின்றது

Written by lankamuslim

திசெம்பர் 12, 2010 at 3:47 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாளை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை

leave a comment »

நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள மூவாயிரத்து 804 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இப்பரீட்சைக்கு மொத்தம் 5 இலட்சத்து 8 ஆயிரத்து 416 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 813 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாவர். இவர்களுக்கான வினாப்பத்திரங்களை விநியோகிக்கவும் விடைப்பொதிகளைச் சேகரிக்கவுமாக 532 பரீட்சை ஒருங்கிணைப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 12, 2010 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

leave a comment »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை நேற்று சனிக்கிழமை காலை சந்தித்து பேசியுள்ளது இந்த சந்திப்பு கொழும்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம், பஷீர் சேகுதாவூத், ஹரிஸ் மற்றும் அஸ்லம் ஆகியோரும் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 12, 2010 at 1:15 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐரோப்பா செல்ல நெடியவனிடம் விஸா பெறவேண்டிய நிலை உருவாகும்

leave a comment »

எதிர்காலத்தில் இலங்கையர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது புலிகளின் முக்கியஸ்தர் நெடிய வனிடம் விஸா பெறவேண்டிய நிலை உருவாகும்  என்று கூறியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் கருத்துதுறைகையில் புலம்பெயர் தமிழர்கள் என்ற சொல்லை என்னால் ஏற்க முடியாது. ஏனெனில் இவர்களுக்கு இலங்கை என்கிற சொந்த நாடு உண்டு. பொருளாதார நோக்கங் களுக்காகதான் வெளி நாடுகளுக்கு சென்று குடியேறி உள்ளனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 12, 2010 at 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இனி சிங்களத்தில் மட்டும் தேசிய கீதம் ?

leave a comment »

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும் என கை அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது இதன்படி தற்போது தமிழிலும் பாடப்படும் தேசிய கீதம் எதிர்காலத்தில் தேசிய நிகழ்வுகளின் போது பாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய கீதத்தில் வரும் மாதா என்ற சொல் வடக்கு – கிழக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரித்தான சொல் என்பதை கருத்திற் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை ‘National Anthem only in Sinhala; Tamil version out’ என்ற தலைப்பில் செய்தியிட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 12, 2010 at 10:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நோபல் பரிசு வழங்கும் விழாவில் இலங்கையும் கலந்து கொள்ளவில்லை

leave a comment »

2010ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கும் விழா ஓஸ்லோ நகரில் நேற்று இடம்பெற்றுள்ளது இதில் நோபல் பரிசுக்கு பல சீனா விரோத நபர்கள் என்று சீனா கருதும் நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சீனா கடும் ஆத்திரம் அடைந்தது. நோபல் பரிசு கமிட்டிக்கு எதிராக தீவிரமான பிரசாரமும் செய்தது.

இந்த நிலையில், நோபல் பரிசு வழங்கும் விழா ஓஸ்லோ நகரில் 10.12.2010 அன்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ளுமாறு 65 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது . சீனாவின் நெருங்கிய தொடர்புகள் காரணமாக இலங்கை, ரஷ்யா, கஜகஸ்தான், கொலம்பியா, ஈரான், ஈராக், வியட்னாம், அர்ஜென்டினா, கியூபா, எகிப்து, பாகிஸ்தான், உள்பட 20 நாடுகள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் நகர சபையின் அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்

leave a comment »

புத்தளம் நகர சபைத் தலைவர் எம்.என்.எம்.நஸ்மி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று கூடிய சபை அமர்வின் போது சபைத் தலைவரினால் வரவுசெலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டின் உத்தேச வருமானமாக 7 கோடி 69 இலட்சத்து 54 ஆயிரத்து 700 ரூபாவாகவும் உத்தேச செலவீனமாக 7 கோடி 33 இலட்சத்து 16 ஆயிரத்து 445 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது  இவ்வரவு செலவுத் திட்டம் நகர சபையில்  நேற்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மன்னார்: விடத்தல்தீவு முஸ்லிம்களின் வரலாறு

leave a comment »

எம்.எ.அப்துல் மஜீத்
விடத்தல்தீவு முஸ்லிம்களது வரலாற்றை நோக்குகின்ற போது, இலங்கை முஸ்லிம்களின் நீண்ட பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட குடியிருப்புகளில் இதுவும் ஒன்றாகும். இங்கு முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாகத் தமது தனித்துவ அடையாளத்தைக் கொண்டவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.

அராபிய முஸ்லிம்கள் வர்த்தகர்களாக மாந்தை துறைமுகத்துடன் மிக நீண்ட காலமாக தொடர்பு வைத்திருந்ததுடன், அங்கு குடியேறினர் என்பதை பின்வரும் வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. பெரிய பிரித்தானியாவினதும், அயர்லாந்தினதும், அரசு ஆகிய கழக நிலை அறிக்கையில் கொழும்பில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு சம்பந்தமாக சேர் அலக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் நைட் வீ. பீ. ஆர். ஏ. எஸ் என்பவர் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் இலங்கையில் அரேபிய முஸ்லிம்களது பூர்வீக குடியிருப்புக்கள் பற்றி பின்வருமாறு எடுத்தியம்புகிறது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:15 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தப்பியோட முயற்சித்த சந்தேக நபர் இருவர் உயிரிழப்பு

leave a comment »

வரக்காபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு பொலிஸார் உயிரிழந்தது தொடர்பில் மீரிகம பிரிவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தப்பியோட முயற்சித்த போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவரும் உயிரழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தீர்வை உலகுக்கு தெரிவிக்கும் வாய்ப்பை திசை திருப்பிவிட்டனர்

leave a comment »

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழ கத்தின் உரையில் தெளிவுபடுத் துவதற்கு நான் திட்டமிட்டி ருந்தேன். இதனூடாக எமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளனரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து ஜனாதிபதி நேற்று உரையாற்றினார். சுமார் 50 நிமிடம் சபையில் பேசிய அவர் மேலும் கூறியதாவது; வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படவில்லை எனச் சிலர் இனவாத ரீதியாகக் கருத்துக்களைக் கூறியுள்ளனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வடமாகாண முஸ்லிம்கள் எதிர்நோக்கும் தேர்தல் விடயங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் பேசப்படும்

leave a comment »

பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான நூர்தீன் மசூர்  திடீரென வபாத்தான  சூழ்நிலையில் வன்னி மாவட்டத்தில் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உரிய தீர்வுகளை காண்பதற்காக பேச்சுகள் நடைபெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமையில் கொழும்பு வன்னி மாவட்ட முஸ்லிம்களுடன் நடைபெற்ற கட்சியின் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளின் முடிவில் வன்னி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாவட்டத்தைச் சேர்ந்த தமது கட்சியின் முக்கியஸ்தர்கள் தேர்தல் ஆணையாளரை விரைவில் சந்திக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 1:10 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனையில் நிர்மானிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் விரைவில் கையளிக்கப்படும்

leave a comment »

கல்முனை பஸ் நிலையத்தில் USAID நிறுவனத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கடைத்தொகுதிகள் மிக விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என கல்முனை மாநகர மேயர் மசூர் மௌலானா தெரிவித்துள்ளார்.

சுனாமியால் அழிவடைந்த வர்த்தக கடை தொகுதிகளை புதிதாக நிர்மாணிக்க 2007 ஆண்டு  கல்முனை மாநகர சபையின் முயற்சியாலும்  USAID நிதியுதவியாலும் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது

கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 19 கடைத்தொகுதிக்கும் 2008 ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது. இக் கடைகளை மக்களுக்கு வழங்குவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் நிலவியதால் கடைகளை வழங்குவதில் பல தாமதங்கள் ஏற்பட்டன விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 1:09 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சாய்ந்தமருது பிரதேசதிற்கு நிதியொதுக்கீடு

leave a comment »

திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இவ்வாண்டிற்கான தனது வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகளுக்காக 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

 

Written by lankamuslim

திசெம்பர் 11, 2010 at 1:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மொழிகளை நடைமுறைப்படுத்தாத அரச ஊழியர்கள் குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்

leave a comment »

இனங்களுக்கிடையே நல்லுறவு ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ், சிங்கள மொழிகள் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும். வடமாகாணத்தில் தேர்தல் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகள் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க உந்து சக்தியாக இருக்கும். வெறுமனே சம்பள உயர்வு பெறுவதற்காக மாத்திரம் தமிழ் அல்லது சிங்கள மொழிப் பரீட்சையில் சித்தி எய்திவிட்டு, அம்மொழியை நடைமுறைப்படுத்தாமலிருக்கும் அரச ஊழியர்கள் குறித்தும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் – இவ்வாறு அவர் தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 10, 2010 at 9:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஏறாவூர் ரயில் விபத்தில் ஒருவர் வபாத்

leave a comment »

இன்று காலை 11. 25 மணியளவில் ஏறாவூர் மிக் நகர் வீதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கர வாகனமொன்று ரயிலுடன் மோதியதால் முச்சக்கர வாகன சாரதி ஸ்தலத்திலேயே வபாத்தாக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுகின்றது வபாத்தானவர் ஏறாவூரைச் சேர்ந்த எஸ்.எல். ரஸீன் வயது ௧௯ என்ற வாலிபர் என்று அடையாளம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவருடன் குறித்த முச்சக்கர வண்டியில் இரு பயணிகளும் பயணம் செய்ததாகவும் ஆனால் அவர்கள் பாய்ந்து தப்பிவிட்டனர் என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Written by lankamuslim

திசெம்பர் 10, 2010 at 5:33 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலிகளின் ஆதரவாளர் சீமான் இன்று வெளியில் வருகினார்

leave a comment »

இந்திய இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பேசியதாலும் இலங்கை சிங்கள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசியதாலும் ஐந்து மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இந்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த புலிகள் ஆதரவு அமைப்பான ‘நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் இன்று விடுதலை செய்யப்பட உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது

Written by lankamuslim

திசெம்பர் 10, 2010 at 9:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியாவில் மற்றும் ஒரு இலங்கை அமைச்சருக்கு எதிரான போராட்டம்

leave a comment »

இந்திய பங்களூர் அரண்மனை மைதானத்திற்கு இலங்கை தேசிய மருத்துவ அமைச்சர்சலிந்த திஸாநாயக்கா, இன்று செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ அமைச்சராக இருக்கும் சலிந்த திஸாநாயக்கா, பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இன்று நடைபெறும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைக்க உள்ளார். யுத்த குற்றம் புரிந்ததாக கூறப்படும் அரச சபையில் உள்ள சலிந்த திஸாநாயக்கா பங்களூருக்கு வரக்கூடாது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 10, 2010 at 9:26 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மர்ஹூம் நூர்தீன் மசூர் பற்றிய ஓர் இந்திய பதிவு

leave a comment »

ஆளூர் ஷாநவாஸ் என்ற அறிய பட்ட ஒரு இந்திய முஸ்லிம் படைப்பாளர்  முஸ்லிம்களின் அரசியல் எழுச்சிக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் வேண்டி அழுத்தமான பதிவுகளை தந்து கொண்டிருப்பவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, சமாதானம் தழைத்திருந்த அந்த அமைதியான சூழலில், கொழும்பில் நடைபெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்தபோது

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் , இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்களை பேட்டி கண்டு ஒன்றுமை என்ற சஞ்சிகையில் பதிவு செய்தார் இந்த பேட்டி 2002 ஆண்டு இலங்கையின் முஸ்லிம்களின் நிலையை காட்டுவதாக அமைந்திருக்கின்றது என்பதாலும் மர்ஹூம் நூர்தீன் மசூர் அவர்களை நினைவில் கொள்ளும் முகமாகவும் இது பதிவு செய்யபடுகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 10, 2010 at 9:10 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு

leave a comment »

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இளம் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் செய்தி நுட்பங்கள் என்னும் தலைப்பில் ஒரு ஊடக பயிற்சி வகுப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிகபட்டுள்ளது இந்த பயிற்சி வகுப்பு எதிர்வரும் ௧௮ ஆம் திகதி சனிகிழமை அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளில் காரியாளையத்தில் நடைபெறவுள்ளது .

இளம் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரித்தல் மற்றும் உரிய முறையில் அறிக்கையிடுத்தல் தொடர்பாக பயிற்சி வழங்கும் நோக்கில் இந்த பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தெரிவித்துள்ளார் கலந்து கொள்ள விரும்புவோர் 0772612288 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தம்மை பதிவு செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 10:39 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

1,42,381 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி; 22 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு

leave a comment »

க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அதில் அதிவிஷேட சித்திகளைப் (3ஏ) பெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வகையில் நாடளாவிய ரீதியில் 4,384 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும் பாடசாலை ரீதியாக 3908 பரீட்சார்த்திகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ள அதேவேளை, தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 476 பேர் 3 ஏ பெற்றுள்ளனர்.உயிரியல் விஞ்ஞான பாடத்தில் அகில இலங்கை ரீதியாக 367 பேர் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 286 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 81 பேரும் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 8:44 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த 50 க்கு மேற்பட்ட நாடுகள் முயற்சி

leave a comment »

தலைமறைவாகத் திரியும் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரையும், ஆயுதக் குழுவினரையும் ஒன்று திரட்டி நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் ஒன்றை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் 50க்கும் அதிகமான நாடுகள் முயல்கின்றது என்றும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று தெரிவிக்கபடுகின்றது

மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த சர்வதேச புலி ஆதரவு அமைப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்று நம்பகரமான தகவல்கள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் புலிகளின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 8:10 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஷ்ரப்நகர் மக்களில் சிலரை வெளியேற்றுமாறு அம்பாறை அரச அதிபர் உத்தரவு

leave a comment »

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அஷ்ரப்நகர் பிரதேசத்தில் குடியிருக்கும் 31 பொதுமக்களை அவர்களின் 66 ஏக்கர் விஷ்தீரணமுள்ள காணிகளிலிருந்து வெளியேற்றுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு, 01 டிசெம்பர் 2010 எனும் திகதியிட்டு அரசாங்க அதிபர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 9, 2010 at 7:17 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மட்டகளப்பு மாவட்டத்தில் சோளம் அமோக விளைச்சல்

with one comment

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் சோளம் செய்கை அதிகளவில் விளைச்சலாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்த சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சோளம் செய்கை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய  பகுதிகளிலேயே அதிகமாக சோளம் செய்கை பண்ணப்பட்டதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 5:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஷ்கர் வித்தியாலய மைதான அபகரிப்பு: தடை உத்தரவு கோரி வழக்கு

with one comment

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் வாழைச்சேனை அஷ்கர் வித்தியாலயத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானக் காணியினை வாழைச்சேனை புத்த ஜெயந்தி பௌத்த விகாரைக்கு சொந்தமெனக்கூறி இன்று (7.12.2010) காலை முதல் வேலி போட்டு அடைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருந்தனர்

பௌத்த விகாரைக்கு சொந்தமெனக்கூறி வேலி போட்டு அடைப்பதை தடைசெய்வதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இன்று புதன்கிழமை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 3:40 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

விக்கிலீக்ஸ் இரகசிய கசிவா தனிப்பட்ட ‘private’ தகவல்களின் கசிவா ?

leave a comment »

‘இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தளங்களை அமைப்பதற்கான உதவி நிலையமொன்றை கொழும்பில் எற்படுத்துவதற்கு லக்ஸர் இ-தொய்பா இயக்கம் முயற்சித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தகவலொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது’ என்று ஊடகங்களில் பெரும்பாலும் இந்த தகவலை ஒத்த செய்திகள் பதிவு செய்யபட்டன, இதற்கு மேலாக சென்ற பல புலிகளின் ஆதரவு தமிழ் இணையதளங்கள் இலங்கையில் லக்ஸர் இ-தொய்பா முகாம் அமைத்துள்ளது, இலங்கையில் அவர்களுக்கு பயிற்சி வளங்கபடுகின்றது என்று வேறு சில தகவல்களையும் தமது பொய்களையும் கலந்து கூறியது.

இந்த லக்ஸர் இ-தொய்பா என்ற இயக்கம் கொழும்பில் உதவி நிலையமொன்றை எற்படுத்துவதற்கு முயற்சித்ததாக’ தெரிவிதுள்ளதான செய்தியை ஏற்கனவே இந்திய இராணுவ அதிகாரிகளை ஆதாரம் காட்டி அமெரிக்க இராணுவ அதிகாரியொருவர் சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் விரிவாக பார்க்க விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 1:23 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தொடர் மழையினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 138 037ஆக அதிகரிப்பு!

leave a comment »

நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் 26 ஆயிரத்து 313 குடும்பங்களைச் சேர்ந்த 138 037ஆயிரத்து பேர் பாதிக்கபட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.இதுவரை 3 மரண  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதிகளவு வெள்ளப் பாதிப்பிற்குட்பட்ட மாவட்டமான மன்னாரில் 33 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, கம்பஹா, அம்பாந்தோட்டை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் கடுமையான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 59 குடும்பங்களைச் சேர்ந்த 7784 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.310 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 3 ஆயிரத்து 683 வீடுகள் சேதமடைந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Written by lankamuslim

திசெம்பர் 8, 2010 at 10:55 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரிஸானா நபீக் வீடு திரும்புகிறார் ?

with one comment

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண்ணான ரிஸானா நபீக்கிற்கான மரண தண்டனை அமுல்படுத்தப்படுவதை மரணமான குழந்தையின் பெற்றோர் ரிஸானாவை மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளமையை தொடர்ந்து சவூதி அரேபிய மன்னர் மரண தண்டனையை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுகின்றது

அதேவளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸான நபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க சவுதி அரேபிய மன்னர் தீர்ப்பினை இடைநிறுத்தியுள்ளதாக பாராளுமன்றத்தில் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 5:48 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் காணியை பௌத்த விகாரைக்காக அத்துமீறி பிடிப்பதற்கு முயற்சி – ஜவாஹீர் சாலி

leave a comment »

அபூறப்தான்: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் மீறி வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் வாழைச்சேனை அஷ்கர் வித்தியாலயத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானக்  காணியினை வாழைச்சேனை புத்த ஜெயந்தி பௌத்த விகாரைக்கு சொந்தமெனக்கூறி இன்று (7.12.2010) காலை முதல் வேலி போட்டு அடைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டிருப்பது

குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கும் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் தான் உடினடியாக கொண்டு வரப்போவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாஹீர் சாலி காத்தான்குடி இன்போவுக்கு தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 2:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹஜ் குழு மீதான குற்றச்சாட்டுக்கு திட்டவட்ட மறுப்பு

leave a comment »

இந்த வருடத்திற்கான ஹஜ் பயணத்தின்போது ஹஜ் குழு உறுப்பினர்கள் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தேசிய ஹஜ் குழு திட்டவட்டமாக மறுக்கின்றது. இதற்கு முந்திய ஆண்டுகளில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா கட்டணமாக செலுத்தியே ஹஜ் பயணத்தை ஹஜ்ஜா ஜிகள் மேற்கொண்டு வந்தனர். வழமையாக நான்கு ஆயிரத்திற்கும் ஐந்து ஆயிரத்திற்கும் இடைப்பட்ட வர்களே ஹஜ் பயணம் செய்துவந்தார்கள். ஆனால் இம்முறை 5,800 இற்கும் மேற்பட்டவர்கள் ஹஜ் பயணம் செய்தி ருக்கின்றார்கள். குறிப்பாக 6,336 பேர் ஹஜ்ஜுக்கு பயணம் செய்துள்ளார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இம்முறை ஹஜ் கட்டணம் இயலுமானவரை குறைக்கப்பட்டதேயாகும். இத்தொகை சுமார் 3, இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வாகும். இது ஹஜ்ஜாஜிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகுமென ஹஜ் குழு உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 12:50 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சுபியான் மெளலவி குழு கிளிநொச்சி மாவட்ட அதிபருடன் சந்திப்பு

leave a comment »

கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். மாநகர சபை உறுப்பினர் சுபியான் மெளலவி தலைமையிலான குழுவொன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது.

இச் சந்திப்பு நேற்று பிற்பகல் 3 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. நாச்சிக்குடா, வட்டக்கச்சி, கிளிநொச்சி நகர், சேவிஸ் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகளும் யாழ் முஸ்லிம் பிரதிநிதிகளும் இக்குழுவில் அங்கம் வகித்தனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 7, 2010 at 9:42 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஹிஜ்ரி 1432 புத்தாண்டு வாழ்த்துகள்

with one comment

முஹர்ரம் புத்தாண்டு பிறக்கின்றது. ஹிஜ்ரி 1431 கழிந்து 1432 பிறக்கின்றது. முஸ்லிம் உம்மாவின்  முஹர்ரம் ஆண்டின் முதல் மாதம் ஆரம்பித்துள்ளது, எமக்கு இது ஹிஜ்ரத்தை நினைவுபடுத்துகிறது.  இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாம் உயர்வு பெற்று வளர காரணமாக இருந்த ஹிஜ்ரத்தை  ‘தியாக பயணம் ‘  அடிப்பதியாக  கொண்டு   முஹர்ரம் ஹிஜ்ரத் ஆண்டின்   முதல் மாதமாக அமைக்கப்பட்டுள்ளது – அனைவருக்கும் எமது புத்தாண்டு 1432-வாழ்த்துகள்- 1432 AH- 7 December 2010

Written by lankamuslim

திசெம்பர் 6, 2010 at 2:11 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அடைமழை; கடல் மட்டம் அதிகரிப்பு

leave a comment »

வட இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவருகின்ற அடைமழை காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியில் கடல் மட்டம் உயர்ந்து ஊருக்குள் நீர் புகுந்துள்ளது.
பெருமளவு குடும்பங்கள் இடம்பெயரவும் நேரிட்டுள்ளது. அத்துடன் வடமேற்குக் கரையோர மாவட்டமாகிய மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை மற்றும் தலைமன்னார் பகுதிகளில் கடல் நீர் மட்டம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மழையினாலும் கடல் நீர் மட்டம் உயர்ந்திருப்பதனாலும் கரையோர கிராமங்கள் அனைத்துமே பாதிக்கப்பட்டிருப்பதாக மன்னார் பிரதேச செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2010 at 9:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மேற்குலகின் இட்டை கொள்கை: பிரதமர்

leave a comment »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலக்கு வைத்து பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட புலிகள் இயக்க ஆதரவாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை ஜனநாயகத்தை விரும்பும் உலகின் எந்தவொரு நாடும் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்க முடியாது பயங்கரவாதம் தொடர்பாக சில ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வரும் இரட்டை கொள்கை double standards உலகிற்கு வெளிக்கொணரவேண்டும். என பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார். பிரதமர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளவை வருமாறு:

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல் கலைக்கழக மாணவர் சங்கம் விடுத்திருந்த அழைப்பை மக் கள் தலைவரான ஜனாதிபதி ஏற்றுக் கொண்டது அந்தப் பல் கலைக்கழகத்துக்குக் கிடைத்த கௌரவமாகும். இருந்தும், ஜனா திபதிக்கு இழைக்கப்பட்ட இடை யூறு மூலம் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் குழுவொன்று சர்வதேச ரீதியில் செயற்படு கிறது என்பது தெளிவாகின்றது. இதுபோன்ற சம்பவங்களால் இலங்கை இன ரீதியாக  விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2010 at 8:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொழும்பு நகரின் அரச காணிகளில் வாழ்பவர்கள் கொழும்பு நகருக்குள்ளேயே குடியமர்த்தப் படுவர்

leave a comment »

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் 2011 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையின் போது   கொழுபில் அரச காணிகளில் சட்டவிரோதமாக வாழ்ந்து வரும் மக்கள் அவர்கள் இருக்கும் இடங்களில் தொடர் மாடிகளை நிர்மாணித்து அவர்களின் அந்த இடங்களிலேயே அவர்களை குடியமர்த்த முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்

அதே வேளை சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற சுஜாதா ஜெயவர்த்தன நினைவுக் கருத்தரங்கில் ‘ கொழும்பு நகரின் அபிவிருத்தித் திட்டம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய    பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கொழும்பு நகரில்  சட்டவிரோத  அரச காணிகளில்  வாழந்து வருபவர்களுக்கு கொழும்பு நகருக்குள்ளேயே அடிப் படைவசதிகளுடனான  தொடர்மாடி வீடமைப்பு திட்டயங்கள் அமைத்து கொடுக்கப்படுமென தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2010 at 8:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புலிகளின் புதிய தலைவரை குறிவைக்கும் அதிகாரிகள்

leave a comment »

டி.பி.எஸ். ஜெயராஜ்

விநாயகம் என்னும் இயக்கப்பெயரில் ஐரோப்பாவில் தொழிற்படும், தன்னைத் தானே தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவரென கூறிக்கொள்ளும் நபர்மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை சென்ற வாரம் இலங்கை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விரைந்து மேற்கொண்டனர்.

சேகரபிள்ளை விநாயகமூர்த்தி அல்லது விநாயகம் என்பவரை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் நவம்பர் 24 ஆம் திகதி கேட்டுப் பெற்றுக்கொண்டனர் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 6, 2010 at 8:05 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

உலகத் தமிழர் பேரவையையும் நெடியவனின் அமைப்பையும் அழிக்கவேண்டும்: றோகான்

leave a comment »

ஜனாதிபதி மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு நேர்த்தியா தொலைதொடர்பு முறைகள் இல்லாமை காரணம் என தெரிவித்துள்ள பேராசிரியர் றோகான் குணரட்னா, உலகத் தமிழர் பேரவையை அழிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்தாவின் பிரித்தானியா பயணம் தோல்வியடைந்ததற்கு சரியான தொலைதொடர்பு வசதிகளைப் பேணாததே முக்கிய காரணம். மேலும் இலங்கை அரசு வெளிநாடுகளில் தனது பிரச்சாரங்களை முனைப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நாம் முதலில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை உலகத் தமிழர் பேரவையை அழிக்க வேண்டும். இரண்டாவதாக நெடியவனின் அமைப்பை அழிக்கவேண்டும். மூன்றாவதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் சிறீலங்கா அரசு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். என்று தெரிவித்துள்ளதாக அறிய முடிகின்றது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2010 at 9:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பசியால வாகன விபத்தில் இருவர் வபாத்

leave a comment »

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பசியால வீதியின் மாவனல்ல சந்தியில் இருவர் வபாதத்கியுள்ளதாக தெரியவருகின்றது ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் வபாத்தான இருவரும் பசியாலையை சேர்ந்த ஒரு குடும்ப உறவினர்கள் என்று அறியமுடிகின்றது.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டியில் இருந்தவர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது முச்சக்கர வண்டி வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சமயம் கார் சாரதியின் தவறின் காரணமாகவே இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்துள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 5, 2010 at 8:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கட்டுகஸ்தோட்டையில் வீட்டின் மேல் மண்மேடு விழுந்துள்ளது ஒருவர் பெண் வபாத்

leave a comment »

கண்டி கட்டுகஸ்தோட்டை இனிகலை என்ற பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் கலந்த கற்பாறை விழுந்ததனால் 72 வயதுப் பெண் ஒருவர் உயிரிந்துள்ளார். வபாத்தானவர் அப்துல் மஜீட் தாகிர் உம்மா என்ற வயோதிப பெண்

இன்று அதிகாலை 2.00 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின்மீது மண் , கற்பாறை கொண்ட மண்மேடு விழுந்துள்ளது. இதன்போது அவர் வபாத்தாகியுள்ளார் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2010 at 5:35 பிப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஈரானில் தொடரும் அணுவாயுத விஞ்ஞானிகள் படுகொலை

leave a comment »

மஜித் ஸஹ்ரீரி

M.ரிஸ்னி முஹம்மட்:கடந்த நவம்பர் 29 ஆம் திகதி  காலையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஈரானிய அணுசக்தித்துறை முக்கிய விஞ்ஞானி டாக்டர் மாஜித் ஸஹ்ரீரி படுகொலை செய்யப்பட்டார் மற்றொரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் மற்றுமொரு முக்கிய அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான கலாநிதி பரிதூன் அப்பாஸி படுகாயமடைந்தார்.

அதேவளை கடந்த -12.01.2010- அன்று அணுவாயுத விஞ்ஞானியும் பல்கலை கழக முதுநிலை பேராசிரியருமான மசூத் முஹம்மதி குண்டு வெடிப்பொன்றில் படுகொலைசெய்யப்ட்டார் இந்த கொலைகளுக்கு அமெரிக்காதான் காரணம் என்று ஈரான் தெரிவித்திருந்தது என்பதும் குறிபிடத்தக்கது விரிவாக பார்க்க

Written by lankamuslim

திசெம்பர் 5, 2010 at 12:23 பிப

உலக செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் வர்த்தகர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மட்டக்களப்பு மாநகர சபை கடைகள் குத்தகை

leave a comment »

கௌரவ மாநகர முதல்வர்
மாநகர சபை
மட்டக்களப்பு

அம்மணி

மாநகர சபை கடைகள் குத்தகை

மட்டக்களப்பு மாநகர சபைக்குச் சொந்தமான கடைகளை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக கடைகளை குத்தகையில் பெறுவதற்கு  விண்ணப்பம் செய்பவர்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் எல்லைக்குல் வசிப்பவராகவும், அதனை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தெடுக்கப்பட்ட வாக்காளர் இடாப்பு, மற்றும் கிராம உத்தியோகத்தரின் வதிவிடச் சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்கள் இணைத்து குத்தகை விண்ணப்பம் செய்யப்பட வேண்டும் என குத்தகைக் கேள்வி அறிவித்தலில் குறிபிடப்பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 5, 2010 at 9:00 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

புலி ஆதரவு அமைப்புகள் அடாவடித்தனம் எம்பி பைசல் காசிம் விரட்டப்பட்டார் !

leave a comment »

இன்று கோவையில் ஜவுளி வர்த்தகக் கண்காட்சியை திறந்து வைக்க வந்த இலங்கை  எம்பி  பைசல் காசிம் இன்று மதிமுக மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன

கண்காட்சியை திறந்து வைக்காமலேயே பின்வாசல் வழியாக  ஓட்டம் பிடித்தனர். இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி.  பைசல்காசிம், அமைச்சர் ரிஷாத்  ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள்தான் கண்காட்சியை திறந்து வைப்பதாகவும் இருந்தனர் ஆனால் அமைச்சர் ரிஷாத் இந்தியா செல்லவில்லை விரிவாக பார்க்க video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 4, 2010 at 9:30 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மூதூரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள்

leave a comment »

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாட்சிய பதிவுகள் மூதூர் பிரதேச செயலகத்தில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 3.25மணி வரை இடம்பெற்றுள்ளது இந்த ஆணைக்குழுவின் அமர்வில் 201 பேர் சாட்சியமளித்துள்ளனர். மூதூர் பிரதேசதிலிருந்து முஸ்லிம்கள் 2006 ஆண்டு வெளியேற்றப்பட்டமை குறிபிடத்தக்கது இது தொடர்பான சாட்சியங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது

இன்றைய மூதூர் பிரதேச செயலகத்தில் 93 சாட்சியங்கள் காணாமல் போனோர் தொடர்பிலும் 60 சாட்சியங்கள் தடுப்பு காவலில் உள்ளேர் தொடர்பிலும் 19 சாட்சியங்கள் கடத்தி செல்லப்பட்டோர் தொடர்பிலும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 29 சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

Written by lankamuslim

திசெம்பர் 4, 2010 at 9:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் பஸ்ஸில் துப்பாகியை காட்டி மிரட்டியவர் மட்டகிப் பிடிக்கபட்டார்

leave a comment »

நீர்கொழும்பு பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கி புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பயணிகளை தமிழ் இளைஞர் என்று இனம் காணப்பட்ட ஒருவர் நேற்று மாலை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் அதை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற இவரை பிரயாணிகள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

இவர் புத்தளத்தை சேர்ந்தவர் என்றும் உறவினர்கள், நண்பர்கள் சிலரை சந்திக்கின்றமைக்காக சில நாட்களுக்கு முன் நீர்கொழும்புக்கு வந்திருந்தார் என்றும் தெரிய வருகின்றது. இவர் மதுபோதையில் இருந்துள்ளார் பஸ்ஸில் பயணி ஒருவருடன் தகராறு செய்து கொண்டதை தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டியுள்ளார்

Written by lankamuslim

திசெம்பர் 4, 2010 at 8:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்கள மொழியில் மட்டும் அபாய அறிவிப்பு பலகைகள்

leave a comment »

மாத்தளை, கண்டி A9 வீதியில் ஹலால் பிட்டி என்ற பிரதேசத்தில் மண் சரிவு நிலச்சரிவு, அபாயம் உணரப்டுகின்றது உக்குவளை உள்ளடக்கிய சில பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான முன்னறிகுறிகள் தோற்றம் பெற்றிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அண்மையில் அறிவித்தது

குறித்த இந்த பிரதேசத்திலுள்ள வீதியில் திடீரென மண் மேடுகள் மாறும் பாரிய கருங்கற்கள்  கடந்த நாட்களாக விழுந்துள்ளன. இப்பகுதி ஊடாக வாகனங்கள் பயணிக்கும் போது பாதைகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாலும் மண் மேடுகள், பெரிய கற்கள் வீதியல் விழுவதாலும் வீதியில் செல்பவர்களை  அறிவுறுத்தும் அறிவிப்பு பதாகைகள்   சிங்கள மொழியில் மட்டும் வைக்கப் பட்டுள்ளது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

திசெம்பர் 3, 2010 at 8:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது