Lankamuslim.org

காத்தான்குடி சம்மேளன காரியாளையத்தை தீவைக்க முயற்சி

leave a comment »

F.M.பர்ஹான்: மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை 02.05மணியளவில் சம்மேளனத்தின் முன்நுழைவாயில் கதவு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவு இனந்தெரியாத நபர் களினால் தீ மூட்டப்பட்டுள்ளது.

இதனால் சம்மேளன காரியாலயத்தின் பிராதான கதவு கரிய நிறத்திலும் அதன் அருகில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் சில வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை வேளையில் வீதியில் ரோந்துப்படைகளாகச் செல்லும் படையினரே இதை அனைத்துள்ளதாகவும் அவ்வாறு அனைக்கப்பட்டிருக்காவிடில் சம்மேளன காரியாலயத்தின் கதவு முற்றாக எரிந்திருக்கும் என அங்கிருந்த பொது மக்கள் தெரிவித்தனர்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் தெளிவு படுத்துவதற்காகவும் தம்புள்ளை பர்ஹான் பள்ளிவாயல் விவகாரம் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்காக கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேராவின் பங்குபற்றுதலுடன் நேற்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்று அதில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லையெனவும் ஊடகங்கள்தான் அதைத் திரிபுபடுத்தியுள்ளது எனவும் கிழக்குக் கட்டளைத் தளபதி கூறியதையடுத்தே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஜ.சுபைரிடம் நேரடியாக கேட்டபோது இந்த சம்பவம் நேற்றைய சம்மேளனக்கூட்டத்தைத் தழுவியே இடம்பெற்றுள்ளது எனவும் நேற்றைய கூட்டத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் வேண்டுளோளின் படி அனைவரும் நோன்பு பிதெ;துக்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட வேண்டுமெனவும் இஸ்லாம் அனுமதிக்காத விடயங்களில் ஈடுபடக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதை விரும்பாத தீய சக்திகள்தான் இதை செய்திருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை வழமையாக காத்தான்குடிப் பிரதேசத்தில் திறக்கப்படும் ஹோட்டல்கள் இதுவரை திறக்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஏப்ரல் 26, 2012 இல் 8:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பின்னூட்டமொன்றை இடுக