Lankamuslim.org

பிரதமருடன் சந்திப்பு இடம்பெறவில்லை ஜனாதிபதியுடன் சந்திப்பு விரைவில்

with 2 comments

M.ரிஸ்னி முஹம்மட்: ஜனாதிபதி நேற்று நாடு திரும்பியுள்ளார் இந்த நிலையில் தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் விடயத்தை கையாள முஸ்லிம் சமூகத்தின் ஆங்கீகாரம் பெற்ற தரப்பை இன்னும் ஓரிரு தினங்களில் சந்திப்பார் என்று எதிர்பர்கப்படுகிறது எதிர்வரும் திங்கட்கிழமை சாதிக்கலாம் என்று தகவல்கள் வெளியானபோதும் இன்னும் சந்திப்புக்காக நாள் தீர்மானிக்கப் படவில்லை என்று அறியமுடிகிறது.

ஆனாலும் நாளையோ நாளை மறுதினமான திங்கட்கிழமையோ சந்திப்பு இடம்பெற கூடிய வாய்ப்பு இருப்பதாக்க தெரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளை நேற்று பிரதமர் முஸ்லிம் பிரமுகர்களை சந்தித்து அதில் எட்டப்படும் முடிவு உடனடியாக நடைமுறைபடுத்தப் படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியமை குறிப்பிடதக்கது ஆனால் இது தொடர்பாக நேற்றும் இன்றும் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவிடம் இது தொடர்பாக வினவியபோது குறித்த அறிவித்தல் எதுவும் எமக்கு வரவில்லை என்று தெரிவித்தனர் .

அதேவேளை ஜனாதிபதியை முதலில் சந்திப்பதற்காக பிரதமருடனான சந்திப்பு தவிர்க்கபட்டுள்ளதாகவும் எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தம்புள்ளை ஜும்ஆ மஸ்ஜித் முற்றுகை தாக்குதல் மற்றும் மஸ்ஜிதை அகற்ற எடுக்கப்படும் முயற்சிகளை தொடர்ந்து எழுதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தலைமயிலான உயர்மட்ட குழு ஜானாதிபதியுடன் சந்திபதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றமை குறிப்பிடதக்கது .

அதேவேளை தம்புள்ள ஹைரியா ஜும்ஆ மஸ்ஜித் தாக்கப்பட்டதையும், அதை வேறு இடத்திற்கு இடமாற்ற மேற்கொள்ளபடும் முயற்சிகளை கண்டித்தும், மஸ்ஜித் அதே இடத்தில் இயங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த மூன்று நாட்களாக நாடு பூராவுமுள்ள முஸ்லிம்கள் நேன்பு ,துவா பிராத்தனை, மற்றும் ஹர்த்தால், அமைதி ஆர்பாட்ட பேரணிகள் என்று நடத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது , நேற்று யாழ்பாணத்தில் கூட அமைதி ஆர்பாட்டம் இடபெற்றமை குறிப்பிடத்தக்கது .

Written by lankamuslim

ஏப்ரல் 28, 2012 இல் 9:23 முப

முஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. untill we get a solution from president about dambulla masjith , all moulavis and muslim MPs should not participat in governtment functions, TV programes and radio functions etc ,

    aa

    ஏப்ரல் 28, 2012 at 3:17 பிப

  2. 27 th shakthi news

    The Voice I am

    ஏப்ரல் 28, 2012 at 4:12 பிப


பின்னூட்டமொன்றை இடுக